அண்ணாமலை பல்கலைக்குகிடைத்தது 'ஏ' கிரேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

அண்ணாமலை பல்கலைக்குகிடைத்தது 'ஏ' கிரேடு

சிதம்பரம்:''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு,  நாக் கமிட்டி, 'ஏ' கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது,'' என, நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அண்ணாமலை பல்கலையில் முறைகேடுகள், நிதி நெருக்கடி காரணமாக, 2013 முதல், அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதன்பின், நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு, தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு - நாக் கமிட்டி ஆய்விற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கடந்த நவ., 12ம் தேதி முதல், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர் ஷெட்டி தலைமையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், 13 பேர் கொண்ட, நாக் கமிட்டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, பல்கலைக் கழக தற்போதைய நிலைகள் குறித்து, நிர்வாகம் சார்பில், நாக் கமிட்டியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.ஆய்விற்கு பின், நாக் கமிட்டி, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு, 'ஏ' கிரேடு வழங்கியுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகள் வரை, இதே தரம்

கடைபிடிக்கப்படும்.'ஏ' கிரேடு தரத்தால், மத்திய அரசின் யு.ஜி.சி., மூலம், பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சி திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி, கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும், 700 பல்கலைக் கழகம் மற்றும் கல்லுாரிகளில், நாக் கமிட்டி ஆய்வு செய்ததில், 'ஏ' கிரேடு தரத்தில், 42வது ரேங்க்கில் அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளது.

1 comment:

  1. பலர் வாழ்வில் ஒளி ஏற்றிய பல்கலைக்கழகம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி