கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை: ஸ்மிர்தி இரானி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை: ஸ்மிர்தி இரானி தகவல்


கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 25-ஆம் தேதி முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என நவோதயா பள்ளிகளுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள ஸ்மிர்தி இரானி, அன்றைய தினம் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனையொட்டி திட்டமிடப்பட்டுள்ள கட்டுரைப்போட்டி, இணையதளம் வழியாகவே நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி