நர்சிங் பயிற்சி பள்ளிகளில் வார்டன்கள் இல்லை நிர்வாகிகளாகும் விடுதிப் பணியாளர்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

நர்சிங் பயிற்சி பள்ளிகளில் வார்டன்கள் இல்லை நிர்வாகிகளாகும் விடுதிப் பணியாளர்கள்?

தமிழகத்தில் செங்கல்பட்டு தவிர மற்ற அரசு நர்சிங் பயிற்சி பள்ளிகளில் வார்டன்கள் தனியாக இல்லாததால் விடுதிப் பணியாளர்களே நிர்வாகிகள் போல் செயல்படுகின்றனர்.
தமிழகத்தில் அரசு நர்சிங் பயிற்சி பள்ளிகள் 23 உள்ளன. நர்சிங் மாணவிகளை நிர்வகிப்பதற்கு பி.எஸ்சி., மனையியல் முடித்த பட்டதாரிகளை வார்டன்களாக நியமிக்க வேண்டும் என இந்திய நர்சிங் கவுன்சில் விதிமுறை வகுத்துள்ளது. ௫௦ மாணவிகளுக்கு ஒரு வார்டன் என இருக்க வேண்டும். செங்கல்பட்டு தவிர மீதியுள்ள பள்ளிகளில் வார்டன்களே இல்லை. இதனால் பயிற்றுனர்கள் வார்டன்களாக பெயருக்கு செயல்படுகின்றனர். ஆனால் மாணவிகளின் வருகைப்பதிவேடு பராமரிப்பது, வீட்டுக்கு செல்வது, மருத்துவமனைக்கு செல்வது, விடுதிக்கு வருவது ஆகியவற்றை கண்காணிக்கின்றனர். விடுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்வது, விடுதி உணவகத்தை கண்காணிப்பது, உடல்நலமற்ற மாணவிகளை கவனிப்பது ஆகிய பணிகளை விடுதிப் பணியாளர்கள் செய்ய வேண்டும்.வார்டன்கள் இல்லாததால் பத்தாம் வகுப்பு முடித்த விடுதிப் பணியாளர்கள் வார்டன்கள் போல நிர்வாகம் செய்கின்றனர். சிலநேரங்களில் மாணவிகள் ெவளியே செல்வதற்கும் விடுதிப் பணியாளர்கள் உதவுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நர்சிங் பள்ளியில் மட்டும் ஆண்டுக்கு ௧௮௦ மாணவிகள் வீதம் தற்போது ௬௮௦ மாணவிகள் உள்ளனர். இவர்களில் ௯௯ சதவீதம் பேர் விடுதி மாணவிகள். இங்கு விடுதி வார்டன்களாக ஆண் பயிற்றுனர்கள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால் மாணவிகள் அசவுகரியமாக உணர்வதாக அவர்களின் பெற்றோர்கள் புகார் செய்தனர். டீன் கவனத்திற்கு கொண்டு சென்ற பின் பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல் படி வார்டன்களை நியமிக்க அரசு முன்வந்தால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி