திட்டகமிஷனுக்கு பதில் டீம் இந்தியா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

திட்டகமிஷனுக்கு பதில் டீம் இந்தியா

புதுடில்லி: மத்தியில் பா.., பதவி ஏற்றவுடன், திட்டக்கமிஷனின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என முடிவெடுத்தது. இந்நிலையில், திட்டக்கமிஷனில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநில முதல்வர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்தார்.
  இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் முதல்வர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பெரும்பாலான முதல்வர்கள், திட்டக்கமிஷனில் மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, திட்டக்கமிஷனின் தற்போதைய செயல்பாடுகளுக்கு பதில் டீம் இந்தியா என்ற பெயரில் மூன்றடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். பிரதமர், முதல்வர்கள் அடங்கிய ஒரு குழு. பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அடங்கிய ஒரு குழு. மூன்றாவதாக பிரதமர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு என, மூன்று குழுக்கள் கொண்டதாக திட்டக்கமிஷனை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெட்லி கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி