அரசு உதவி பெறும் கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருடன் நடுநிலை பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

அரசு உதவி பெறும் கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருடன் நடுநிலை பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்


"என்னை போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?" மாணவியின் ருசிகர கேள்வியும் அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?" மாணவியின் ருசிகர கேள்வியும் அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .

முப்பெரும் விழாவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி முதல்வர் சந்திர மோகன்,ரோட்டரி தலைவரும் பேராசிரியருமான முருகன்,மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர்உடன் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ,மாணவியர் நடத்திய கலந்துரையாடல்.கலந்துரையாடல் நிகழ்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உடன் இருந்தார்.

நந்தினி: கல்லூரி முதல்வர் ஆவதற்க்கு என்ன படிக்க வேண்டும்?

முதல்வர்:முதலில் பி.ஜி.கோர்ஸ் முடிக்க வேண்டும்.பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும்.அதன் பிறகு கல்லூரி பேராசிரியராக பணிக்கு வந்து கல்லூரி முதல்வர் ஆகலாம்.

பரமேஸ்வரி :தாங்கள் சேவுகன் அண்ணமலை கல்லூரிக்கு முதன் முதலில் பணிக்கு வந்தபோது என்ன நினைதிர்கள் ?

முதல்வர்:கல்லுரி பணிக்கு முதன் முதலில் வந்த உடன் உங்களை போன்ற கல்லுரி மாணவர்களை நன்றாக கல்வி கற்றுகொடுத்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து நானும் கல்லுரி முதல்வர் போன்ற பெரிய பணிகளுக்கு செல்ல வேண்டும் என குறிக்கோள் நிர்ணயத்து கொண்டேன்.அதே போல் அந்த பணிக்கு வந்து உள்ளேன்.நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை நிர்ணயம் செய்து அதனை அடைய வேண்டும்.என பதில் கூறினார்.

காயத்ரி :தாங்கள் அன்னை நன்றாக திருக்குறள் சொல்வாதாக சொன்னிர்கள் அதனை எங்களுக்கு சொல்லி காண்பியுங்கள் என கேட்டார்.

முதல்வர்:என் என்ப ஏனை எழுத்தென்ப என்கிற குறளை அழாகாக ராகம் வர இசையோடு பாடி காட்டி அதற்கான பொருள் சொன்னார்.மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரோட்டரி தலைவர் முருகனிடம் சமயபுரத்தாள் :தாங்கள் எவ்வாறு ரோட்டரி க்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என கேட்டார்.

தலைவர் முருகன்: உங்களை போன்று படிக்கும் காலத்தில் இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டு அவர்கள் செய்யும் சேவையை பார்த்து நாமும் பிற்காலத்தில் இது போன்று செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தற்போது ரோட்டரி என்கிற அமைப்பின் மூலாமாக சேவை செய்து வருகிறேன் என்றார்.நீங்களும் பிற்காலத்தில் இது போன்று சேவைகள் செய்ய முன்வரவேண்டும் என கேட்டு கொண்டார்.

மருத்துவர் செந்தில்குமார் அவர்களிடம் ராஜேஸ்வரி : மஞ்சள் காமாலை நோய் எவ்வாறு வருகிறது ?

மருத்துவர் செந்தில்குமார்:மஞ்சள் காமாலை நோய் பல்வேறு காரணங்களால் வருகிறது .நாம் தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நம் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மாணவி ரூபா :கண்வலி எதனால் ஏற்படுகிறது?

மருத்துவர் செந்தில்குமார்:கண்வலி தட்ப வெப்பநிலை மாறும்போது அதிக சூடு அல்லது குளிர் காரணமாக வருகிறது.கண்வலி வந்தவர்களின் துணிகளை பயன்படுத்துவதால் மட்டுமே அது பரவும். கண்வலி வந்தவர்களை பார்ப்பதனால் கண்வலி பரவாது.

மாணவன் நடராஜன் :இரத்த சுழற்சி என்றால் என்ன?

மருத்துவர் செந்தில்குமார்:இரத்த சுழற்சி என்பது இருபதனால்தான் நாம் உயிர் வாழ முடிகிறது.இரத்த சுழற்சி பற்றிய தகவல்கள் மேல் வகுப்புகளில் உள்ள பாடங்களில் தெளிவாக இருக்கும்.

இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு சேவுகன் அண்ணாமலை கல்லுரி முதல்வர் சந்திர மோகன்,ரோட்டரி தலைவரும் பேராசிரியருமான முருகன்,மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் பதில் அளித்தனர்.கலந்துரையாடல் நிகழ்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உடன் இருந்தார்.

3 comments:

  1. உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் 10.12.2014 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் திரு. வி, வீரமணி அவர்கள் தலைமையிலும் திரு. சி. சரவணன் முன்னிலையிலும் அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து “குழந்தைகள் உரிமை” எனக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரியும்- தமிழக அரசு அனைத்து ஆசிரியர்களையும் பாதுகாக்கும் வண்ணம் ஆசிரியர் பாதுகாப்பு சட்டம் இயற்றி ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனக் கேட்டு கோரிக்கையும், கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது திரு. கோ. பாஸ்கரன் , திரு. ஏ. அந்தோணி ஜோசப் மற்றும் திரு. ஆர். மருதவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திரு,ஜி. செங்குட்டுவன் அவர்கள் நன்றி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    :

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. புதிய பணியிடங்கள் டிரான்ஸ்பர் செய்திகளை அறிய kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி