சுகாதார அலுவலர் பணிபிப்., 22ம் தேதி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

சுகாதார அலுவலர் பணிபிப்., 22ம் தேதி தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள, 33 சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை, பிப்., 22ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் - டி.என்.பி.எஸ்.சி.,நடத்துகிறது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பொது சுகாதார துறையில் உள்ள, 33 சுகாதார அலுவலர் காலிப் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பதவிக்கு, பி.எஸ்.எஸ்சி., சுகாதார அறிவியலில் இளம் அறிவியல் பட்டம் அல்லது பொதுசுகாதாரத்தில் டிப்ளமோ, எம்.பி.பி.எஸ்., - டி.எம்.எஸ்., அல்லது எல்.எம்.பி., கல்வித்தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், www.tnpscexams.net எனும் இணையதள வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கான எழுத்து தேர்வு, பிப்., 22ம் தேதி, முற்பகல் மற்றும் பிற்பகலில், சென்னை மையத்தில் நடக்கும். இதற்கு, ஜன., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட பொது தகவல்களை, தேர்வாணையத்தின்,

www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி