குற்றம் செய்யும் மாணவர்களை சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

குற்றம் செய்யும் மாணவர்களை சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க அறிவுரை

பள்ளிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில், 'கடுமையான தவறு செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறு' மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இதனை தடுக்க, குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பதினெட்டு வயதிற்கு குறைவான மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்புமாறு மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் குற்றம் செய்யும் ஓரிரு மாணவர்களை பிரித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்புவதால், அப்பள்ளியில் மற்ற மாணவர்கள் நிம்மதியாக படிக்க வழி ஏற்படுத்த முடியும் என அந்த குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி