வரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

வரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை


இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆசிரியர்

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன்தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் உள்ள அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் வரலாறு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முதுகலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில்1:3 என்ற முரண்பாடான விகிதாச்சார முறை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ல் சென்னையில் நடைபெற்ற முதுகலை வரலாறு ஆசிரியர் கலந்தாய்வில் வரலாற்றில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 1 பணியிடமும்,இளங்கலையில் வேறுபாடமும், முதுகலையில் வரலாறு பட்டமும் பெற்றவர்களுக்கு 3பணியிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு பதவி உயர்வில் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

வழக்கு:

மேலும் கடந்த 2012-ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடும் போது தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகம் முரண்பாடான விகிதாச்சார முறையை தொடரக்கூடாது என வேண்டுகோள் விடுத்தது. மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனர் எங்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டார். இதற்கிடையில் 2014-ம் ஆண்டு நிலவரப்படி 1:3 க்கு என்ற முரண்பாடான விகிதாச்சார முறையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் தற்போது வழங்கப்பட்ட முதுகலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து

எனவே இளநிலை, முதுகலையில் வேறு வேறு பாடங்களை படித்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி தயாரிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக எடுத்து படித்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதன்பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. 1:3 ratio kadaipidikkum governmentkku thanks.

    ReplyDelete
    Replies
    1. SOON MADRAS HIGH COURT WILL GIVE A JUDGMENT FOR 100% SAME MAJOR PROMOTION.

      Delete
  2. engaludaiya korrikkaipadi 1:3 kku neethiarasar support seiyya irravanai pirarthippom. veru,veru padankalai paditha varallatru aasiriyar sangam.

    ReplyDelete
    Replies
    1. THE JUSTICE WILL BE GIVEN 100% TO SAME MAJOR TEACHERS.

      Delete
  3. pg vaithu thaan promotion valangukirarkal. athanal cross major 1:3 is 100 percent correct.

    ReplyDelete
    Replies
    1. UG, PG ARE VERY IMPORTANT TO GIVE PROMOTIONS. SO 100% WILL BE GIVEN TO SAME MAJOR TEACHERS. THEY ARE ONLY ELIGIBLE FOR PROMOTION.

      Delete
  4. cross majorkku tamilnadu government 1:3 ratio koduppathinal ethirkalathil IAS,IPS pondra thervukalil tamilnadu first placekku varum. thanks to tamilnadu school education department.

    ReplyDelete
    Replies
    1. HOW IS IT POSSIBLE SAME MAJOR TEACHERS CAN ONLY CREATE AN IAS, IPS, OFFICERS.

      Delete
  5. Same majoruku 3 pangu.. cross majoruku 1 pangu ...kodukkavendum...this is best method....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி