மேலும் மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும் மனு அளிப்பதற்காகக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் திங்கள்கிழமை இரவு புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உடையார்கோயில் குணா கூறியது:
இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருவள்ளுவர் இயற்றிய குறள்கள் தனிப்பட்ட ஜாதி மதத்தைச் சாராமல், நடுநிலையுடன் மனித வாழ்வியலுக்கான வழிகாட்டுதலை எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் வழிகாட்டுபவையாகும்.
இப்படிப்பட்ட நூலை தேசிய நூலாக மத்திய அரசு அறிவித்தால், இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பதாக அமைவதோடு தேசிய ஒருமைப்பாடும் மேலோங்கும்.
இதைக் கருத்தில் கொண்டே தமிழக சட்டப்பேரவையிலும் கடந்த 13-04-2005 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், உலகின் பிற நாடுகளில் தேசிய அடையாளங்களாக பல இருந்தாலும், நூல் என்ற வகைப்பாடு எந்த நாட்டிலும் முன்னுதாரணமாக இல்லை என்று கூறி, முந்தைய காங்கிரஸ் அரசு தமிழகத்தின் தீர்மானத்தை நிராகரித்து விட்டது.
எனவே, உலகிலேயே அறிவு இலக்கிய வாழ்வியல் நூலுக்கு அங்கீகாரம் அளித்து, முன்னுதாரணமாக இந்தியா திகழும் வகையில், இப்போதைய பாரதிய ஜனதா அரசு வருகிற 2015-இல் திருக்குறளுக்கு தேசிய நூல் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
திருவள்ளுவரின் உருவப் படம் அல்லது உருவச் சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவுவதோடு, இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும். மேலும் 2015-ஆம் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டாக அறிவிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்தோம். தொடர்ந்து புதுதில்லி சென்று நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யை சந்தித்து ஒரு அடி உயர திருவள்ளுவர் சிலையை ஒப்படைப்பதோடு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரையும் வருகிற 11-ஆம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.
Sri sir supreme court case hearing yeppo
ReplyDeleteமொழி பெயர்தலைவிட தமிழ் மொழியிலேயே நடத்த சொல்லலாமே.!
ReplyDeleteமொழி பெயர்தலைவிட தமிழ் மொழியிலேயே நடத்த சொல்லலாமே.!
ReplyDelete