படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே சிறப்பு 'கையேடு': ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே சிறப்பு 'கையேடு': ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

மாநில அளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சிறப்பு 'கையேடு' வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

பத்து, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எளிதில் சந்திக்கவும் சிறப்பு 'கையேடு' வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது. மாவட்டந்தோறும் சி.இ.ஓ.,க்கள் தலைமையில் பாடவாரியாக ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இக்குழு தயாரித்த வினா, விடை அடங்கிய சிறப்பு 'கையேடு' அரையாண்டுத் தேர்வுக்குள் மாணவர்கள் கையில் கிடைக்கவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியது. டிச. 10ல் பிளஸ்2க்கும், டிச.12ல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத் தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில் சிறப்பு 'கையேடு'கள் வினியோகிக்க சில மாவட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுத்தேர்வை கருத்தில்கொண்டு தயாரித்தாலும், அரையாண்டு தேர்வுக்கு முன்பே மாணவர் கையில் கிடைத்தால் நல்லது என ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

தமிழாசிரியர் கழக மாநில பொதுச்செயலர் இளங்கோ கூறியதாவது: இருமாதங்களுக்கு முன்பே 'கையேடு' தயாராகிவிட்டது. வினியோகிப்பதில் தாமதமானால் மாணவர்கள் வேறு உரைகளை வாங்கி தேர்வுக்கு தயாராவர். சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டத்தில் பிளஸ்2 விற்கு மட்டும் வினியோகிக்கப்பட்டுள்ளது. 'பிரின்டிங்' காரணத்தால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, அந்தந்த மாவட்டம் என்பதை தவிர்த்து, மாநில அளவில் ஒரே மாதிரியான சிறப்பு 'கையேடு' தயாரித்து வழங்கலாம்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி