ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் அரசாணையை நீக்க வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்நடந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர் விஜயகுமார், பொருளாளர் வேலாயுதம், தேர்வுச் செயலர் ரமேஷ், இணைச் செயலர் கலிவரதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில மதிப்பியல் தலைவர் ராமலிங்கம் பேசினார். அதில், அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து மன்றத் தேர்வு நடத்துவது. மாணவர் நலன் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 100சதவீதம் தேர்ச்சி வழங்க பாடுபடுவது. திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாடவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய அருண் விஜய் எம்.பி.,க்கு பாராட்டுதெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி