தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இரத்தவகை கண்டறிதல் முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இரத்தவகை கண்டறிதல் முகாம்.


தேவகோட்டை ரோட்டாரி சங்கத்தின் சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இரத்ததானம் பற்றிய கருத்தரங்கமும், தன் மேம்பாட்டுபயிற்சியும், இரத்தவகை கண்டறிதல் முகாமும் தேவகோட்டை ரோட்டாரி சங்கத் தலைவர் முனைவர் கரு.முருகன் தலைமையில் நடைபெற்றது.
சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியின் தலைமையாசியர் எல்.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . 8 ஆம் வகுப்பு மாணவி ர.மங்கையற்கரசி வரவேற்புரை வழங்கினார் ;. இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு முகாமை தேவகோட்டை ரோட்டரி சங்க இரத்ததான தலைவர் மருத்துவர் கா.செந்தில்குமார் அவர் கள் துவக்கி வைத்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தும் சிறப்புரையாற்றினார் . தன்மேம்பாட்டுப் பயிற்சியினை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சந்திரமோகன் அவர்கள் சிறப்புரையுடன், சினேகபிரியா(8ஆம் வகுப்பு), வசந்தகுமார் (7ஆம் வகுப்பு), சொர்ணாம்பிகா(8ஆம் வகுப்பு), காயத்ரி , கிருஷ்ணவேணி, மணிகண்டன், சமயபுரத்தாள், பரமேஸ்வரி ஆகிய மாணவ, மாணவியர் “எனது இலக்கு” என்ற தலைப்பில் கருத்துரு வழங்கினர் .

இரத்தவகைகண்டறிதல் முகாமை தேவகோட்டை நறுமுகை மருத்துவமனை நிறுவன தலைவர் மருத்துவர் கே.எஸ்.சுமதி அவர்களது தலைமையில் இரத்தவகை கண்டறிதல்முகாம் நடைபெற்றது. நன்றியுரை 7ஆம் வகுப்பு மாணவி டி. தனம் கூறினார். விழாவில் சாகுல்ஹமீது, மலையப்பன், மஸ்தான்கனி ஆகியோர்கலந்து கொண்டனார். முப்பெரும் விழாவை தேவகோட்டை ரோட்டாரி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

1 comment:

  1. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் மாறுபட்ட மலைப்படியை குறித்து ஒரு கட்டுரை:
    ஒரு அரசு வழங்கும் படிகளை பொறுத்தவரை,அந்த அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக தான் வழங்க வேண்டும்.ஆனால் மலைப்படிக்கு மட்டும் இடத்திற்கு இடம்,
    ஒன்றியத்திற்கு ஒன்றியம்,மாவட்டத்திற்கு
    மாவட்டம் மாறுவது ஏன்?
    1.தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட
    ஆதிதிராவிடர் நலத்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+90=ரூ.1590.
    2. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் தொடக்க கல்வித் துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+80=ரூ.1580.
    3.தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
    தொடக்ககல்வித்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500=1500.
    தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
    தொடக்ககல்வித்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி விளக்கம்:
    1. 31.05.2009 வரை வழங்கிய மலைப்படி:ரூ.450+45=ரூ.495.
    2. 01.06.2009 முதல் 19.02.2014 வரை வழங்கிய மலைப்படி:ரூ.900+90=ரூ.990.(அ.எண்:236/01.06.2009)
    3. 20.02.2014 முதல் இன்று வரை வழங்கும் மலைப்படி:1500.மட்டும்.
    4. 20.02.2014 ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்:47/20.02.2014 மலைப்பபடியான‌ ரூ.900 என்பது ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில் ரூ.90,நீக்க சொல்லி எந்த கருத்து இடம் பெறவில்லை. ஆனால் ரூ.90 ஐ நீக்கி ரூ.1500, மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை சரி செய்ய உதவுங்கள்,இது சம்மந்தமான வேறு ஏதேனும் அரசாணை இருந்தால் வெளியிடுக.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி