காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக் கட்டடம் கட்ட முடியாமல் தாமதமாகி வருகிறது.
காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் கடந்த 1957-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பள்ளி 1979-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்தப் பள்ளியில் ஆற்பாக்கம், அதைச் சுற்றியுள்ள மாகறல், ஆதவப்பாக்கம், கன்னிகுளம், கடம்பர்கோயில், வயலூர், காவந்தண்டலம், கீழ்பேரமநல்லூர், மேல்பேரமநல்லூர், நெல்வேலி, வேடல், களக்காட்டூர், குருவிமலை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுருட்டல், குண்டையார்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்போது இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 367 மாணவர்கள், 314 மாணவிகள் என மொத்தம் 681 பேர் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளிக் கட்டடங்கள் 1957, 1968, 1979 ஆகிய காலக்கட்டத்தில் கட்டப்பட்டுள்ளன.
இதனால் பெரும்பாலான வகுப்பறைக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இதனால் அவை மூடப்பட்டுவிட்டதால், போதிய வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து இப்போது பள்ளி வளாகம் அமைந்துள்ள எதிர் பகுதியில் 5 ஏக்கர் இடத்தை ஒருவர் பள்ளிக்கு தானமாக வழங்கினார்.
இங்கு விளையாட்டு மைதானத்துடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி 2 அடுக்குகளுடன் கூடிய 30 வகுப்பறைகள், ஆய்வகம் அடங்கிய புதியக் கட்டடம் கட்ட தமிழக அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
பொதுப் பணித் துறை மூலம் குடியாத்தத்தைச் சேர்ந்த தனியார் ஒருவர் இந்தப் பள்ளிக் கட்டடம் கட்ட ஒப்பந்தம் பெற்றார்.
ஓராண்டு காலத்துக்குள் கட்டடம் கட்டி முடிப்பது என்ற உறுதியுடன் கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடங்கியது.
75 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பணிக் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் கடந்த சில மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.
ஆனால் இப்போது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிக் கட்டடப் பணி மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கட்டடப் பணி முழுமை அடைவதற்குள் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டுவிட்டன. இப்போது அந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இதனால் புதிய வகுப்பறை என்ற மாணவர்களின் கனவு கானல் நீராகியுள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியது:
பள்ளிக் கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை வலியுறுத்தியும் ஒப்பந்ததாரர் ஒத்துழைக்க மறுக்கிறார்.
கடந்த ஓர் ஆண்டாக ஆட்சியரின் நேரடிப் பார்வையில் கட்டடப் பணி நடைபெற்றது. இப்போது மீண்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பொதுப் பணித் துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொதுப் பணித் துறை நிர்வாகப் பொறியாளர் சர்வேஸ்வரா கூறியது: விரைவில் இக்கட்டடப் பணியை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒப்பந்ததாரரை அழைத்துப் பேசி விரைவில் கட்டடப் பணி முடிக்கப்படும் என்றார்.
பணி முடிக்கும் முன்பே உடைந்து தொங்கும் ஜன்னல் கதவு.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி