அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி தொடக்க விழாவில் இந்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக 42 யூனிட்டுகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்க அரசு ஆணையிட்டது. முதல்கட்டமாக, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 73 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி