அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'அனிமேஷன்' வகுப்புகளுக்கு,சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, 'ஸ்மார்ட் கிளாஸ்'கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன் அடிப்படையில், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை 'சிடி' வழியாக, 'அனிமேஷன்' வடிவில் பாடம்நடத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'அனிமேஷன்' வகுப்புகளை நடத்த, கூடுதலாக சிறப்பு ஆசிரியர்களை, தற்காலிக அடிப்படையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற 'சிடி'க்களை தேர்வு செய்து திரையிடுவது மற்றும் 'அனிமேஷன்' தொடர்பான வகுப்புகளை நடத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்தில், 'அனிமேஷன்' வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Animation CD can be prepared by 10 computer knowledged persons and BRT teachers and distributed all school. That will uniform, common and same
ReplyDeleteWhy wasting money by new appointment. Whose money is spent