பள்ளிகளில் "சிசிடிவி கேமரா' கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

பள்ளிகளில் "சிசிடிவி கேமரா' கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.


அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர், மாணவர்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவிகேமராவை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உதயசூரியன், செந்தில்வளவன், ஜவகர் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.மதுரவாயல் கணினி ஆசிரியை மாணவனால் தாக்கப்பட்ட சம்பவம், சென்னை லயோலா பள்ளி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை கண்டிப்பது, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது, நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்குதல், அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.சங்க நிர்வாகிகள் ஜம்பு, ஞானசேகரன், செல்வகுமாரி, ஏழுமலை, பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி