பள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

பள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க கோரிக்கை.


பள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலை மையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை நாள்களில் நடைபெறவுள்ள சிறப்புத்தேர்வை,பள்ளி வேலைநாள்களில் நடைமுறைப்படுத்த வேண்டும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட பயிற்சியை விரைவில் வழங்கவேண் டும், அரையாண்டுத்தேர்வு முடிவினை ஆய்வுசெய்யும்போது அனைத்து ஆசிரியர்களை யும் வரவழைத்து ஆய்வுசெய்யும் முறையைத்தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனு அளிப்பதற்காக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலச்செயலர் சேது.செல்வம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொருளாளர் இளங்கோ, தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச்செயலர் கணேசன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் எட்வின், ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாவட்டச்செயலர் லூயிஸ், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் பழனியப்பன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி