மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம்: பேரவை துணைத் தலைவர் வழங்கினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம்: பேரவை துணைத் தலைவர் வழங்கினார்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா வினா-விடை புத்தகங்களை சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.ஜெயராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கடந்த நான்கு ஆண்டுகளாக, பொள்ளாச்சி, உடுமலை சட்டப்பேரவை தொகுதிகள், அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா வினா-விடை புத்தகங்களை வழங்கி வருகிறார்.

அதன்படி, 10, பிளஸ் 2 பயிலும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா வினா-விடை புத்தகம், 5 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மருத்துவ முதலுதவி கையேடுகள் வழங்கும் விழா, பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் நினைவு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், இந்தியாவிலேயே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நினைப்பவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா. அதையொட்டி, அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு விலையில்லா வினா-விடை புத்தகங்களை வழங்கி வருகிறேன் என்றார்.

விழாவில், நகராட்சி நிர்வாகம், சட்டம், சிறைத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளைஞர் பாசறை நிர்வாகி அக்னீஷ் முகுந்தன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ.-க்கள் முத்துகருப்பண்ணசாமி, சண்முகவேல், நடராஜ், பொன்னுச்சாமி, முன்னாள் எம்.பி.சுகுமார், மாவட்ட அவைத் தலைவர் வெங்கடாசலம், பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

வினா-விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி நடைபெற்றது.மாணவர்களுக்கு வினா-விடை புத்தகங்களை வழங்கிய சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். உடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி