பள்ளிகளில் ராமானுஜம் நூற்றாண்டு விழாகொண்டாட மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2014

பள்ளிகளில் ராமானுஜம் நூற்றாண்டு விழாகொண்டாட மத்திய அரசு உத்தரவு


கணிதமேதை ராமானுஜத்தின் நுாற்றாண்டு விழா மற்றும் வானியல் அறிஞர் பாஸ்கராச்சார்யா -II வின் பிறந்தநாள் விழாவை, பள்ளிகளில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 16ம் தேதி முதல், டிச., 22ம் தேதி வரை இவ்விழாவை கொண்டாடுமாறு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில், மாணவர்கள் கணித பாடத்தில் பின்தங்கியுள்ளனர்.

அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 'உளச் சார்பு வளர்ச்சிக்கான எண்ணியல் கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சி - கனிட்' என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் கணிதம் குறித்து, கணித வல்லுனர்கள், முன்னணி அறிவியலாளர்கள் உள்ளிட்டோரின் சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும், ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கலந்தாய்வு, கட்டுரைப் போட்டி, வினா, விடை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி