கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2014

கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேனிவசந்தன், நகரச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உயர்கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும், மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

9 comments:

  1. good mng friends..... வழக்கம் போல் இன்றும் யாமாற்றமே ...... இன்று எந்த வழக்கும் பட்டியலில் இடம்பெறவில்லை தெரிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
  2. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் , எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. கேள்வியும் நானே பதிலும் நானே

    1 ) ADW LIST & PIRAMILAI KALLAR LIST சம்பந்தமான வழக்கின் தற்போதய நிலை என்ன ?

    பதில் : அரசு அவ்விரு வழக்கிற்கும் போதிய விளக்கங்களை தாக்கல் செய்து விட்டது

    அந்த இரு வழக்குகளும் service Case எனவே அவை அவசர வழக்குகள் தான் ஆனால் Court 12 ல் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளும் Service Case என்பதால் அனைத்து வழக்குகளுமே அவசர வழக்கு தான் எனவே தான் கால தாமதம் ஆகிறது

    அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தாலும் இன்னும் அந்த வழக்கில் ஆஜர் ஆகவில்லை

    மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கும் திரு நெல்லை பாண்டியன் ஐயா தான் அவ்விரு வழக்குகளிலும் ஆஜர் ஆவார்கள் என்று தெரிகிறது

    இவ்விரு வழக்குமே இட ஒதுக்கீட்டு சம்பந்தமான வழக்கு என்பதால் இவ்வழக்கை விசாரிக்க போதுமான கால அவகாசம் தேவை எனவே தான் வழக்கிற்கு நாள் ஒதுக்க ஐயா நீதிபதி அவர்கள் யோசிக்கிறார்கள் .

    எங்கள் வழக்கறிஞர் சார்பாக இவ்விரு வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட எங்கள் சார்பாக நீதிமன்ற பதிவாளரிடம் மனு இரு முறை கொடுக்கப்பட்டு விட்டது . முடிவு எடுக்கும் அதிகாரம் ஐயா நீதிபதி அவர்களிடமே உள்ளது

    சரி முடிவு தான் என்ன?

    அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும்

    அரசிடம் இது பற்றி கேட்டீர்களா ? .

    இவ்வழக்கை விரைந்து முடிக்குமாறு நீதிபதியிடம்
    REQUEST பண்ணியிருக்கிறோம் விரைவில் வழக்கை முடித்து பணிநியமனம் செய்து விடுவோம்

    ReplyDelete
  4. மேலும் சில தகவல்

    டிசம்பர் 20 ஆம் தேதி முதல் 10 நாட்கள் நீதிமன்றங்கள் விடுமுறை எனவே அதற்குள் வழக்கு விசாரனைக்கு வந்தால் தான் 2014 ல் நியமனம் இல்லையெனில் 2015 ஜனவரி தான்.

    ReplyDelete
  5. கேள்வி : டிசம்பர் 20 க்குள் நமது வழக்கு முடிக்க என்ன வழி ?

    பதில் : Dec 4 ( நாளை ) நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நமது பிரச்சனையையும் பேச வேண்டும் என சமூக சிந்தனை அதிகம் உள்ள மனிதருள் சிறந்த இரு முக்கிய தலைவரிடம் பேசி உள்ளோம் அவர்கள் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம்

    அதுவரை தைரியமாக, தன்னம்பிக்கை சிறிதும் குறையாமல் இருங்கள்.

    கடவுள் என்றுமே எளியவர் பக்கமே

    ReplyDelete
  6. நண்பர்களே உங்கள் சந்தேகம் எதுவாக . இருந்தாலும் இன்று கல்வி செய்தியில் கமெண்ட் பண்ணி கேளுங்கள் என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த வரை பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  7. Mr agilan sir suprim courtla case eppo varudu sir

    ReplyDelete
  8. Plz rply case detail agilan sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி