'நெட்' தகுதி தேர்வு ஏராளமானோர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2014

'நெட்' தகுதி தேர்வு ஏராளமானோர் பங்கேற்பு


உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவிலான, தகுதித் தேர்வை நெட்,தமிழகத்தில், நேற்று, ஏராளமானோர் எழுதினர்.பல்கலை மானியக் குழு யு.ஜி.சி., சார்பில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவினான, தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும், முதல் ஐந்து சதவீதத்தினருக்கு, ஜே.ஆர்.எப்., எனப்படும், இளநிலை ஆய்வாளருக்கான வாய்ப்பும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ந்தாண்டு முதல், தேர்வை நடத்தும் பொறுப்பை, மத்திய இடைநிலை கல்வி கழகம் சி.பி.எஸ்.இ., யிடம், யு.ஜி.சி., வழங்கியது.விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்தை பெற்று, அவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டையும், சி.பி.எஸ்.இ., வழங்கியது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 105 மேற்பட்ட தேர்வு மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. சென்னையில், 12 மையங்களில், ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினர். காலை, முதல் இரண்டு தாள்களும், பிற்பகல் மூன்றாம் தாள் தேர்வும் நடந்தது.தமிழகத்தில் நேற்று பஸ்கள் இயக்கப்படாததால், பல மையங்களில், தேர்வு எழுத தாமதமாகவந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1 comment:

  1. Sir.paper-1 model question paper and political science paper-2 and paper -3 publish ...thanks a lot....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி