அண்ணாமலை பல்கலைக்கு 'ஏ' கிரேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2014

அண்ணாமலை பல்கலைக்கு 'ஏ' கிரேடு

அண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேடு ஏற்பட்டதால், கடந்த, 2013 ஏப்ரல் மாதம், பல்கலை நிர்வாகத்தை, தன் கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு, அண்ணாமலைப் பல்கலையின் அனைத்து துறைகளையும் தர மதிப்பீடு செய்து, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது. இது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பல்கலை, 860 ஏக்கர் நிலப்பரப்பில், 49 துறைகளுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Credit goes to Government. Congrats

    ReplyDelete
  2. அரசின் கட்டுபாட்டில் இருந்தாலும் கட்டணம் மட்டும் தனியார் பல்கலைகழகங்களை விட அதிகமாக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி