அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு


தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம்.

உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி