இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.


SSTA சார்பாக கடந்த மூன்று மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்

1)CRC SPL LEAVE, POST PERMISSION ல் CRC Spl leave அரசாணை வெளியிட கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன, விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவரஉள்ளது இது SSTA விற்கு கிடைத்த மற்றொரு வெற்றி.

2)உயர் கல்வி அனுமதியின்றி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

3)தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் முதன் முறையாக நியமனம் பெற்ற (17.12.2012) ல் பணியில் சேர்ந்து தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 16.12.2014 அன்று ,விதிகள் படி இரண்டாண்டுகள் நிறைவுசெய்த ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் நிறைவுற்றது ஆகையால் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஓர் அரசாணையை பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.இயக்குனர் கண்டிப்பாக உடனே அதனை செய்ய உத்தரவிட்டார், SSTA வின் முயற்சியில் எந்தவித சிரமங்கள் இன்றி அரசாணை விரைவில் வெளிவரும். (AEEO அலுவலகத்தில் அனைவருக்கும் இதை செய்துமுடிக்க பலவருடங்கள் ஆகிவிடும்)

4)ஒரு துறையில் பணியாற்றி விட்டு வேறு துறைக்கு செல்லும் பொழுது CPS NUMBER மாற்ற ௯டாது என கோரிக்கை வைக்கப்பட்டது அதன் எதிரொலியாக அதை உடனடியாக ஏற்று ,அதனை சரி செய்யும் பொருட்டு பூர்வாங்க (Data center இயக்குநருக்கு கடிதம் மூலம் இதனை சரிசெய்ய)நடவடிக்கைகள் மேற்கொண்டு விரைவில் தேவைப்பட்டால் அரசாணையும் பிறப்பிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

5) 2004-2006 தொகுப்பூதிய காலத்தில் பணியாற்றியதை கருத்தில்கொண்டு தேர்வுநிலை எட்டும் பொழுது அப்பணிகாலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,இது நிதி சார்ந்த பிரச்சினை கண்டிப்பாக பரிசீலனை செய்கிறோம் முடிந்தால் விரைவில் சரிசெய்ய முற்படுவோம் என்றார்.

6)தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக Counseling 2014 பட்டியலில் முன்னுரிமை உள்ளவர்களுக்கு கலந்தாய்வை அரையாண்டு விடுமுறை காலத்தில் வைக்க கேட்டு கொள்ளப்பட்டது அதற்கான அரசாணை பெற்று விரைவில் செய்து முடிப்போம் என்று ௯றி உள்ளார் . பிற கோரிக்கைகள் அடுத்த சந்திப்பின் போது SSTA சார்பாக வலியுறுத்தி நிறைவேற்றிதரப்படும்.

(இயக்குனர் வேறொரு முக்கிய ௯ட்டத்தில் இருப்பினும் நமது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துள்ளார் அதற்கு SSTA வின் மனமார்ந்த நன்றி )

என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி