தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி- NAGAI BALA - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி- NAGAI BALA


ஆசிரியர்களின் பணித்திறனை மதிப்படுவதாக சொல்லி ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் விதமாக கல்வித்துறையின் செயல்பாடு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை (Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை.
பணி நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள்.
பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு என்பது கூடுதல் கல்வித்தகுதி துறைத்தேர்வு மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அளிக்கப்படுகிறது.
ஓர் ஆண்டு முழுவதும் நீண்ட விடுப்போ அல்லது துறை நடவடிக்கையோ இல்லாமல் இருந்தாலே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற பலன்கள்.

தனியார்துறையில் மட்டுமே பிரிட்டிஷ் நடைமுறையை பின்பற்றி தனிபட்ட ஊழியரின் பணித்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

தற்போது 12 பக்கங்களை கொண்ட திறன் அறியும் படிவம் (PINDICS) ஒன்று அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடக்க்க்கல்வித்துறைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படிவத்தின் 10 ஆம் பக்கத்தில் உள்ள ஒரு மதிப்பீட்டு படிவத்தில் தலைமையாசிரியர் ஆசிரியரைப்பற்றி மதிப்பிடுவதாக உள்ளது.
இந்தப் படிவத்தில் ஆசிரியரின் பாடம் பற்றிய அறிவு தொழிற்வளர்ச்சி உள்ளிட்ட 8 செயல்நிலைகளை தலைமையாசிரியர் நான்கு தரநிலைகளில் மதிப்பிடுவதாக உள்ளது.
இந்தப்படிவத்தில் தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கையொப்பமிடுவதாக உள்ளது,
இதனால் ஏற்படும் விளைவுகள்
• இது ஒரு அரசு ஊழியரை மற்றொரு சக அரசு ஊழியர் வெளிப்படையாக மதிப்பிடப்படுவதற்கான ஒரு மோசமான தொடக்கம்.
• ஒரு தலைமையாசிரியருக்கும் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியருக்கும் நல்ல புரிதல் இல்லாத நிலையில் அவருடைய பணித்திறன் நன்றாக இருந்தாலும் ”எதிர்பார்த்த நிலையை அடையவில்லை” என உள்நோக்கத்தோடு குறிப்பிட வாய்ப்புள்ளது.
• ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் ஓரு ஆசிரியரை உயர்வாகவும் மற்றொரு ஆசிரியரை குறைவாகவும் தலைமையாசிரியர் மதிப்பீடு செய்யும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் பள்ளியில் சுமூகமற்ற சூழ்நிலை ஏற்படும். இது கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும்.

எனவே இது போன்று மற்ற துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாத நிலையில் ஆசிரியர்களை மட்டும் மதிப்பீடு செய்வதை தொடக்க்க்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

அல்லது தலைமைச் செயலர் முதல் இரவுக்காவலாளி வரை இது போன்ற வெளிப்படையான மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்களா?

13 comments:

  1. என் இனிய நண்பர்களே.
    இதுவரை இருந்துவரும் ஆனால் சிலத்துறைகளில் மட்டும் தற்போது
    மறுக்கப்படும் இராணுவ வாரிசு. விதவை. கலப்புத்திருமணம் போன்றோருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. இந்திய அரசும் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
    ஆனால். அது தற்போது மறுக்கப்படுவதால் ஒரு குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
    இதைப்பற்றி தகவல் அறிய mailmebyvijay@gmail.com

    ReplyDelete
  2. Vijay Kumar sir my mail Id umagopals200@gmail.com.

    ReplyDelete
  3. என் இனிய நண்பர்களே.

    வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.
    இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Thank u vijaykumar chennai sir lot of thanks

      Delete
    2. Mr vijikumar sir go 29 enna case sir

      Delete
    3. GO 25 என்பது சலுகை கொடுத்தது.
      GO 29 என்பது முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன் சலுகை மூலம் தேர்வானர்களை ஒன்றாக இணைக்க காரணமாக இருந்தது.
      முதலில் பதிவான வழக்கு சலுகையை எதிர்க்கவில்லை. அதற்குப்பதிலாக சலுகை கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிக்காக காத்திருந்தவர்களோடு Mode of selection ல் ஒன்றாக சேர்த்தது தவறு என்றும் Tet certificate ஐ பயன்படுத்திக்கொள்வதையோ அல்லது Aided பள்ளிக்கு செல்வதையோ தடுக்கவிரும்பவில்லை எனவும் முதலில் எங்களுக்கு பணி வழங்கியப்பிறகுதான் சலுகையில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கியிருக்கவேண்டும் எனவும் வழக்கு தொடுத்துள்ளனர். இதுவே GO 29 க்கான வழக்கு விளக்கம்.

      Delete
  4. Vijaykumar sir pls check ur mail

    ReplyDelete
  5. Dear Vijay Kumar sir. My mail Id umagopals200@gmail.com. Please mail me. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ெமெயில் அனுப்ப முடியவில்லை.

    ReplyDelete
  6. Vijayakumar sir whn will come pg final list sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி