TNPSC:Group-IV : பொதுத் தமிழ் - 9 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2014

TNPSC:Group-IV : பொதுத் தமிழ் - 9

உழவின் சிறப்பு

மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை

ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை

நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி

காக்கும்கை காராளர் கை

- கம்பர்


சொற்பொருள்:

* மேழி - கலப்பை, ஏர்

* வேந்தர் - மன்னர்

* ஆழி - மோதிரம்

* சூழ்வினை - உண்டாகும் வறுமைத் துன்பம்

* காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்

ஆசிரியர் குறிப்பு

* இயற்பெயர்: கம்பர்

* பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது.

* ஆதரித்தவர்: சடையப்ப வள்ளல்

* இயற்றிய நூல்கள்: கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.

* சிறப்பு: கல்வியில் பெரியர் கம்பர், கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

* காலம்: பன்னிரண்டாம் நூற்றாண்டு.

* வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள இடம் - கோவை

* கோவையில் நடைபெறும் வேளாண்மைப் பல்கலைக்கழக கண்காட்சிகுச் செல்ல முகுந்தனுடன் கயல்விழியுடன் வருவதாகச் சொன்னார்.

* வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலன் மாமா நெடுமாறன் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

* வேளாண்மைத் துறையில் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் நீர், நிலம், காற்று, ஆகாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

* இயற்கை வேளாண்மைக் கூறுகள் - உழுதல், விதைத்தல், தொழு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், காத்தல் முதலியன.

* நிலத்தை எப்படி உழுதல் வேண்டும் - விதைக்கும்முன் நிலத்தைப் பண்பட உழுதல் வேண்டும். அதாவது ஒருபலம் எடையுள்ள மண்ணைக் கால்பலம் எடை அளவிற்கு உலரும்வரை உழுதிடுதல் வேண்டும்.

* நன்செய் - நீர்வளமிக்கது. இந்நிலத்தில் நெல், கரும்பு, வாழை முதலிய பயிர்கள் விளையும்.

* புன்செய் - நீர்வளம் குறைந்த பகுதி. இதனை வானம் பார்த்த பூமி என வேளாண் மக்கள் கூறுவர். இந்நிலத்தில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்கள் விளையும்.

* எந்தெந்தப் பயிர்க்கு எவ்வளவு இடைவெளி வேண்டுமென்பதனை முன்னேர் கூறுவர் - நெல்லுக்கு நண்டோட; கரும்புக்கு ஏரோட; வாழைக்கு வண்டியோட; தென்னைக்குத் தேரோட எனக் குறிச் செனண்றுள்ளனர்.

* பஞ்சகவ்வியம் என்பது - பசுவிடமிருந்து கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களை கலந்து செய்வதே பஞ்சகவ்வியம்.

* காப்பு - காத்தல் இதனை "கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்"



துணைப்பாடம்: நிலைத்த செல்வம் கல்விச் செல்வம்

* நகை வணிகர் தங்கம், வைரத்தை சிறந்த செல்வம் எனக் கூறுவர்.

* புலவர் - கல்விச் செல்வம் சிறந்த செல்வம் எனக் கூறுவர்.

* கல்விச் செல்வத்தை யாராலும் களவாட முடியாது.

* திருடர்கள் நகைகளை புலவர்க்கு  பரிசாகத் தந்தனர்.

* புலவர் திருடர்களை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என கூறினார்.

* கல்விச் செல்வம் நிலைத்த செல்வம் என வணிகர் கூறுவர்.



இலக்கணம்: வேற்றுமை, அடைமொழி

* பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.

* பெயர்ச்சொல்லின்  இருதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை வேற்றுமை * உருபுகள் என்பர்.

* பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு.

* இவ்வேற்றுமை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எட்டு வகைப்படும்.

* இயல்பான பெயர்(எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும்.

* எழுவாய் வேற்றுமைக்கு எனத் தனி உருபு இல்லை.

* இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பதாகும்.

* பெயர்ச்சொல்லினது பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது - இரண்டாம் வேற்றுமை ஆகும்.

* ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன மூன்றாம்  வேற்றுமை உருபுகள் ஆகும்.

* கு - நான்காம் வேற்றுமை உருபு.

* இல், இன் - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.

* இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துவது ஐந்தாம் வேற்றுமை எனப்படும்.

* அது - ஆறாம் வேற்றுமை உருபு.

* பெயர்ச்சொற்களுடன் அது என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து பொருளை வேறுபடுத்துவது ஆறாம் வேற்றுமை எனப்படும்.

* ஏழாம் வேற்றுமைக்கும் கண், உள், மேல், கீழ் என்பன உருபுகளாம்.

* எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

* எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என அழைப்பர்.

* திங்கள் - நிலவு, மாதம்

* நிலவை வெண்ணிலவு என்று அழைப்பார்கள்.

* வெண்மை என்னும் நிலவுக்கு ஆடையாக வந்துள்ளது.

* பொருள்களை இனம்பிரித்தறிய உதவும் அடைமொழிகள் இனமுள்ள அடைமொழிகள் எனப்படும்.



விணைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்

* வருகின்றான், வருவான் என செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும்.

* பழுத்த என்னும் சொல் முற்றுப்பெறாத வினைச்சொல் எனப்படும்.

* ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுப் பெறாத வினைச்சொல்லே பெயரெச்சம் ஆகும்.

* எடுத்து வருவான் எந்த வினையெச்சம் எதிர்கால ஆகும்.

* "எடுத்து வருகின்றான்" என்பது நிகழ்கால வினையெச்சம் எனப்படும்.

* வினையெச்சம் மூன்று காலத்தையும் உணர்த்தும்.

* வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

* "எடுத்து" என்னும் சொல் முடிவுபெறாத சொல் ஆகும்.

* நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.

* மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை எனப்படும்.

* மரபுச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு யானைக்கன்று

* மரபுப்பிழைக்கு எடுத்துக்காட்டு யானைக்குட்டி

* உயிர்களைப் பலியிட வேண்டாம் என்று மன்னர் பிம்பிசாரர்க்கு அறிவுரை கூறியவர் - கெளதம் புத்தர்.



திருக்குறள்

* கசடு - குற்றம்

* நிற்க - கற்றவாறு நடக்க

* எண் - எண்கள், கணக்கு

* எழுத்து - இலக்கண இலக்கியங்கள் (வரிவடிம்)

* உவப்ப - மகிழ

* தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து

* உடையார் - செல்வர்

* இல்லார் - ஏழை

* ஏக்கற்று - கவலைப்பட்டு

* கடையர் - தாழ்ந்தவர்

* தொட்டனைத்து - தோண்டும் அளவு

* மாந்தர் - மக்கள்

* சாந்துணையும் - சாகும்வரையிலும்

* ஏமாப்பு - பாதுகாப்பு

* காமுறுவர் - விரும்புவர்

* விழுச்செல்வம் - சிறந்த செல்வம்

* மாடு - செல்வம்

* உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்

* ஒருமைக்காண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.

* கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருிவருக்கு மாடல்ல மற்றை யாவை



பிரித்து எழுதுக:

* கசடற - கசடு + அடி

* மணற்கேணி - மணல் + கேணி

* எழுத்தென்ப - எழுத்து + என்ப

* கற்றறிந்தார் - கற்று + அறிந்தார்

* மாடல்ல - மாடு + அல்ல



முக்கூடற் பள்ளு

சொற்பொருள்:

* தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்

* முத்தம் அடைக்கும் - முத்துகள் மிக்குப் பெருகிடையே அடைத்துத் கொண்டு கிடக்கும்.

* கலிப்பு வேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்.

* சித்ரம் - சிறப்பான காட்சிகள்

* மதோன் மத்தர் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்.

* முக்கூடற்பள்ளு என்னும் நூலை நாடகப் பாங்கில் அமைத்து இயற்றியவர் - என்னயினாப் புலவர்.

* முக்கூடற்பள்ளு சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட நூல் ஆகும்.

* ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதம்

* வாய்க்கல் நீரை அடைத்தது - முத்துகள்.

* நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் குறுவதாக அமைந்த நூல் - பள்ளு.

ஆசிரியர் குறிப்பு:

* இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.

* ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் "என்னயினாப் புலவர்" எனச் சிலர் கூறுவர்.

* சந்த நயம் மிக்க நூல்.

* திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

* நீர்நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை பற்றியது.

* திருநெல்வேலிக்குச் சற்று வடகிழக்கில் கூடும் ஆறுகள் - தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம் ஆறு

* மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு முக்கூடல் என்று பெயர்.

* முக்கூடலுக்கு ஆசூர் வடகரை நாடு என்னும் பெயருமுண்டு.

* முக்கூடலுக்குத் தென்பால் உள்ள பகுதி சீவலமங்கைத் தென்கரைநாடு என வழங்கப் பெறுகின்றது.

* இரண்டு மனைவிகள் மணந்து திண்டாடும் பள்ளனின் வாழ்க்கை வளத்தை வடித்துரைப்பது போலப் பாடப்பட்ட நூல் - முக்கூடற்பள்ளு.

* தென்கரை நாட்டில் மருதசீர் வீற்றிருக்கும் ஊர் மருதூர்.

* முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி.

* மருத நிலவளம் பற்றி அறிய உதவும் நூல் - முக்கூடற்பள்ளு.

* ஊமத்தம் பூவை விரும்பிச் சூடும் இறைவன் - சிவபெருமான்.

* மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் - சிவபெருமான்

* மருதூரில் உள்ள மக்கள் செய்யும் தொழில் - உலோகத் தொழில்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி