ஜனவரி, 10ம் தேதி நடக்கவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான,டி.ஆர்.பி., தேர்வில், சேலம் மாவட்டத்தில், 10 ஆயிரத்து, 492 பேர் தேர்வெழுத உள்ளனர். இதற்காக, 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள, 1,800 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடம், நேரடி எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, ஜனவரி, 10ம் தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்து, 492 பேர் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர். இதற்காக, 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை சிறப்பாக நடத்த, சேலம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான விடைத்தாள் கட்டுகள் மற்றும் வினாத்தாள் ஆகியவை, ஏற்கனவே சேலம் வந்துவிட்டது. இவை, சேலம் ஏ.ஆர்.லைன்ஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது,சேலம் கலெக்டர் தலைமையில், நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
தேர்வு மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, குறிப்பிட்ட வழித்தடங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தபின் கொண்டுவரவும் ஏற்பாடுகள், தேர்வு மையங்களுக்குரிய பஸ் வசதி மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்துஆலோசிக்கப்பட்டது.இதில், சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செல்வகுமார்,மாவட்டக்கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி