ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில்2014ன் நோபல் பரிசுவிபரம் சேர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2015

ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில்2014ன் நோபல் பரிசுவிபரம் சேர்ப்பு


ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், கடந்த, 2014ல் நோபல் பரிசுபெற்றவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இந்திய வீரர்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு, ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகங்களில்,குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் அவர்களுக்கு எதிரான அடக்கு முறைக்காக போராடிய இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான்பெண் கல்வி நல ஆர்வலர் மலாலா யூசப்சாய்.இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல்,இயல் வேதியியல் மற்றும் உடற்செயலியல் போன்ற துறைகளில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள், குறித்த தகவல்களும் படத்துடன் இடம் பெற்றுள்ளன.

கடந்த, 2014ல் தென்கொரியாவில் நடந்த, 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 11 தங்கம், 10- வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களுடன், இந்திய வீரர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடக்கும் என்ற தகவலும் உள்ளது.இது, கல்வியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி