ஜுன் 25க்குள் நாக் அந்தஸ்து பெறுவது கட்டாயம்: யு.ஜி.சி. துணைத் தலைவர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2015

ஜுன் 25க்குள் நாக் அந்தஸ்து பெறுவது கட்டாயம்: யு.ஜி.சி. துணைத் தலைவர்

அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும், வரும் ஜூன் 25ம் தேதிக்குள், நாக் எனப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலின் தர அந்தஸ்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேலுார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (வி..டி.,), உலக மயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தர உறுதி குறித்த, இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடந்தது. அதன் நிறைவு விழாவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் துணத் தலைவர், எச்.தேவராஜ் கலந்து கொண்டார்.
விழாவில் அவர்பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற வேண்டும் என்பதில், கடந்த, 60 ஆண்டுகளாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. இப்போது, கல்வியின் தரத்தை மேம்படுத்து வதற்கு கவனம் செலுத்துவதை, பல்கலைக்கழக மானியக்குழு நோக்கமாக கொண்டிருக்கிறது.
எல்லா இடத்திலும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. எனவே, இதில் அந்தந்த இடத்துக்கு ஏற்ப, கல்வித்தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உள்ளது. ஆனால், இது தமிழகத்தை பொறுத்தவரை, 48 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

நாடு முழுவதும் எல்லா கல்லுாரிகளும், பல்கலைக்கழகங்களும், வரும் ஜூன் 25ம் தேதிக்குள் நாக் எனப்படும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் தர அந்தஸ்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி