மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை திட்டத்தின் நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு அவசியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2015

மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை திட்டத்தின் நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு அவசியம்

: நடப்பு கல்வியாண்டில், 2.44 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் நிறைவேற, ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்திட்டம், கடந்த 2013ல் துவக்கப்பட்டது. 3 மாவட்டங்கள் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்துக்கு ஒரு நடமாடும் ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.
இதன்மூலம், மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில், 1,188 பள்ளிகளில் உள்ள 2,44,669 மாணவர்களுக்கு குழுவாகவும்; 9,161 மாணவர்களுக்கு தனியாகவும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், அரசு பள்ளிகளில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் கல்வித்தேர்ச்சி மட்டுமின்றி, விட்டுக்கொடுத்தல், தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை போன்றவை, மாணவர்கள் இடையே வளர்ந்துள்ளதாக, பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
எனினும், 3 மாவட்டங்களுக்கு ஒரு உளவியல் நிபுணர் என நியமிக்கப்பட்டுள்ளதால், பயிற்சியை முழுமையாக அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் மூலம் நிதியுதவி பெற்று, மாவட்டத்துக்கு ஒரு உளவியல் ஆலோசகரை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் நடத்திய ஆய்வு மற்றும் உளவியல் பயிற்சியின் மூலம், மாணவர்களுக்கு உண்டான பிரச்னைகளில் குடும்ப சூழ்நிலை, குழந்தை திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த முடியாமல் வன்முறை செயல்களை, வழியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
உளவியல் ஆலோசனை, மாணவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிரியர்களுடன் உள்ள இடைவெளியால், பிரச்னைகளை எடுத்து சொல்ல மாணவர்கள் தயங்குகின்றனர். இதை களைந்தால் மட்டுமே, உளவியல் ஆலோசனை திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். இதற்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி