27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


'கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான வி.ஏ.ஓ., எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது; டிசம்பரில், முடிவுகள் வெளியானது. இதில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன., 27 முதல், பிப்., 12ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின், தரவரிசை அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு. கலந்தாய்வு அழைப்பு, விரைவு அஞ்சல் மூலம், தனியாக அனுப்பப்பட்டு உள்ளது. அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால், மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

10 comments:

  1. Akilan Sir அட்வகேட் ஜெனரல் எப்போது ஆஜர் ஆவார்..?

    ReplyDelete
  2. Akilan sir nala newsoda vanga all the best

    ReplyDelete
  3. adw case judgement ennachu?

    ReplyDelete
    Replies
    1. casey varala innum apporm epdi judgement varum..?

      Delete
  4. adw case judgement (theerppu) ennachu sir?

    ReplyDelete
  5. We expect 2013 grup4 5th. Conlng?

    ReplyDelete
  6. akilan sir nan 2013 pg examla 89 /sc candidate/ marks 1 answer rewrite pannitan but correct answer shaded. Experience 4 .6 years emp.wt . 5 years above. By add these wtg. Nan 95 marks I st. Listla selectaka vendiya nan akala nan enna seiya pls. Chemistry. 9600647254

    ReplyDelete
  7. vaola over all rank sc 700kulla ethanai naparkal ullanar therinchavanka sollunka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி