டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு 65 அதிகாரிகளின் விடைத்தாள்கள் மறு ஆய்வு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு 65 அதிகாரிகளின் விடைத்தாள்கள் மறு ஆய்வு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்ட 83 பேரில், 65பேரின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை அதிகாரி உள்பட 95பதவிகள் காலியாக இருந்தன. இந்த காலி பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படும் என்று 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த தேர்வில், 91 பேர் 2005ல் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பணி கிடைக்காத நடராஜன் உள்ளிட்ட 19 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. சிலர் தமிழ்நாடு தேர்வாணையம் வகுத்த விதிமுறைகளை மீறியுள்ளனர். குறிப்பாக, கலர் பேனா பயன்படுத்தியுள்ளனர். சிலர் தங்கள் பெயரை விடைத்தாளில் எழுதியுள்ளனர். பென்சில்களைப் பயன்படுத்தியதுடன், அதில்திருத்தமும் செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த, வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, விசாரித்து தள்ளுபடி செய்தார். இதைஎதிர்த்து நடராஜன், மாதவன் ஆகிய 2 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் எலிபி தர்மராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து, 2011 மார்ச் 4ம் தேதி தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்&1 தேர்வை வெளிப்படையாக, பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும். சிறிது கூட சந்தேகத்துக்கு இடமின்றி இத்தகைய தேர்வு நடத்த வேண்டும். இந்த நியமனம் சரியானது இல்லை.இது தொடர்பாக 2 வக்கீல்கள் கமிஷன் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது விதிமுறை மீறிய 83 பேரின் விடைத்தாள்களை தவிர மற்றவர்களின் விடைத்தாள்களை மீண்டும் தேர்வாணையம் பரிசீலனை செய்து புதியதாக தேர்வு செய்து தகுதி பட்டியல் தயாரிக்க வேண்டும். விதிமுறை மீறிய 83 பேரை தேர்வு செய்ததும். நியமனமும் செய்ததும் செல்லாது. அதை ரத்து செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் செயலாளர், தேர்வு செய்யப்பட்ட வனிதா, அர்விந்த், பாலாஜி சரவணன், மகேஸ்வரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உயர் நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று உத்தரவிட்டு அவர்களின் மனுவைதள்ளுபடி செய்தனர். இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 83 பேரும் தொடர்ந்து பணியில் ஈடுபடலாம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர்முன்னிலையில் விசாரணைக்கு வந்து. அப்போது, தமிழக அரசு சார்பில் (டிஎன்பிஎஸ்சி) மூத்த வக்கீல் கோபால்சுப்பிரமணியன் ஆஜராகி, இந்த தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று வாதிட்டார். எதிர்தரப்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், பணி நியமனம் செய்யப்பட்ட 83 பேரில் தற்போதுஅரசு அதிகாரிகளாக பணியாற்றி வரும் 65 பேரின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். விடைத்தாள்களில் குறியீடுகள் எதுவும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.மேலும், டிஎன்பிஎஸ்சியின் விதிமுறைகள் இந்த தேர்வில் கடைபிடிக்கப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த நடைமுறைகளை 2 மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று யுபிஎஸ்சிக்கு உத்தரவிட்டனர். விசாரணை மே 6ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி