தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்


தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு)காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தலைமைச் செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் வருகிற 28-இல் தேர்வாணைய அலுவலகத்தில்நடைபெற உள்ளது.

நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி