முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: 2 லட்சம் பேர் எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: 2 லட்சம் பேர் எழுதினர்


தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்.மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வு, 499 மையங்களில் நடைபெற்றது.
மொத்தமுள்ள ஆயிரத்து 807 காலியிடங்களுக்கு, சுமார் 2 லட்சம் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

இதில் பார்வையற்ற மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டது. சென்னையில், 34 மையங்களில் நடைபெற்ற தேர்வை, 15 ஆயிரத்து 49 மாணவர்கள் எழுதினர். நாகை மாவட்டத்தில், 10 இடங்களில் 3ஆயிரத்து 664 பேர் தேர்வெழுதினர். அப்போது 4 தனிக் குழுவினரும், 2 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 448 பேர், 15 மையங்களில் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 4 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி