பிளஸ் 2 செய்முறை தேர்வு கேள்வித்தாள் தயாரிப்பு துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

பிளஸ் 2 செய்முறை தேர்வு கேள்வித்தாள் தயாரிப்பு துவக்கம்.


பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்., இரண்டாம் வாரம்மாநிலம் முழுவதும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது.
மாநிலம் முழுவதும், பிளஸ் ௨ பொதுத்தேர்வுகள் மார்ச் ௫ம் தேதி துவங்கவுள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி இரண்டாம் வாரம் துவங்கவுள்ளது.கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகள் செய்முறை தேர்வுக்கான மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரம், மேற்பார்வையாளர்கள், பறக்கும் படை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைக்கும் பணி நேற்று துவங்கியது. பாடவாரியாகஆசிரியர்கள், அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''செய்முறை தேர்வுகளுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கேள்வித்தாள்கள் வடிவமைக்கும் பணிகளுக்கு சிறப்பு குழு பாடவாரியாக நியமிக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வடிவமைக்கும் ஆசிரியர்கள் பற்றிய விபரமும், இப்பணி எங்கு நடைபெறுகிறது என்பதும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், செய்முறைத்தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி