அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜாக்பட்: பொங்கல் போனஸ் ரூ.3,000; சிறப்பு போனஸ் ரூ.1,000. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2015

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜாக்பட்: பொங்கல் போனஸ் ரூ.3,000; சிறப்பு போனஸ் ரூ.1,000.


பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு,1,000 முதல் 3,000 ரூபாய் வரை, பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க, முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆண்டுதோறும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி, 2013 - 14க்கு, 'சி' மற்றும் 'டி' தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

*'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர் மற்றும் ஆசிரியர்கள்; நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாட்கள், அதற்கு மேலாக பணியாற்றிய முழுநேரம் மற்றும் பகுதிநேர பணியாளர்; சத்துணவு திட்ட பணியாளர்; அங்கன்வாடி பணியாளர்; கிராம உதவியாளர், பஞ்சாயத்து உதவியாளர்; ஒப்பந்த பணியாளர்; தற்காலிக உதவியாளர்; தினக்கூலிகள்; ஒரு பகுதி தினக்கூலியாக இருந்து நிரந்தரமானவர்களுக்கு, 1,000 ரூபாய் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

*உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர், அலுவலர்கள்; பல்கலை மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் பணிபுரிபவர்களுக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

*ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தலையாரி மற்றும் கர்ணம் உட்பட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். போனஸ் மற்றும் சிறப்பு போனசால், அரசுக்கு, 326.49 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி