புதுக்கோட்டை,ஜன4-புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பில்பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வருகிற 6ந்தேதி(செவ்வாய்கிழமை) மற்றும் 8ந்தேதி(வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் நடைபெற இருக்கிறது.
என்று அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வருகிற 6ந்தேதி(செவ்வாய்கிழமை) மற்றும் 8ந்தேதி(வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் நடைபெறுகிறது. அந்த முறையில் குன்றாண்டார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அன்னவாசல் ஒன்றிய பள்ளிகளுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், விராலிமலை ஒன்றிய பள்ளிகளுக்கு விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை ஒன்றியபள்ளிகளுக்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் ஒன்றிய பள்ளிகளுக்கு திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளுக்கு பொன்புதுப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும்,அரிமளம் ஒன்றிய பள்ளிகளுக்கு அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கந்தர்வக்கோட்டை ஒன்றிய பள்ளிகளுக்கு கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருவரங்குளம் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆலங்குடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி ஒன்றிய பள்ளிகளுக்கு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கறம்பக்குடி ஒன்றிய பள்ளிகளுக்கு கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆவுடையார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மணமேல்குடி ஒன்றிய பள்ளிகளுக்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெற இருக்கிறது. 202 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழுக்களைச் சேர்ந்த 625 உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெறும்.பயிற்சியினை தலைமைப்பண்பு பயிற்சி பெற்ற 39 தலைமையாசிரியர்கள் கருத்தாளர்களாக இருந்து நடத்துகிறார்கள்.இப்பயிற்சியினைமாநில அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் முதன்மைக்கல்வி அலுவலராகிய என்னுடைய வழிகாட்டுதலின்படி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரசன்னாதேவி, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு ச.பன்னீர்செல்வம், திரு கா.பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
தகவலுக்காக செய்தியாக்கம்
செய்தியாக்கம்
கி.வேலுச்சாமி பி.எஸ்.சி, எம்.ஏ,எம்.ஏ, எம்.எட், உதவித்தலைமையாசிரியர், (புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செய்தித்தொடர்பாளர்) அரசு மேல்நிலைப்பள்ளி, இராப்பூசல்,இலுப்பூர்(தாலுகா), 622102.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி