பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2015

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்


புவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது.இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:
இதன்படி, ஒரு மாணவர், 7 நாட்கள் வரையில் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இருப்பிடங்களுக்கு சென்று, அவர்களுடன் கலந்துரையாடி, பள்ளிக்கு தவறாமல் வரும் வகையிலான, ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதேபோல், ஒரு மாணவர் 10 நாட்கள் வரமால் இருந்தால், பள்ளி யின் தலைமை ஆசிரி யரும், 15 நாட்கள்தொடர்ந்து வராமல் இருந்தால், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களும் சென்று தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகும், மாணவர் ஒருவர் தொடர்ந்து, 30நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் தான், ஆசிரியர்கள் அவருடைய வருகை பதிவேட்டில், இடைநிற்றல் (டிராப் அவுட்) என்று குறிப்பிட வேண்டும். மேற்கண்ட இந்த முயற்சிகளுக்காக, பள்ளி நிர்வாகம் சார்பில், 5,000 ரூபாய் வரை செலவிடலாம். மாணவர், 30 நாட்களுக்கு பின், பள்ளி திரும்பும் நிலையில், அவர் மீண்டும் பள்ளி யில் அனுமதிக்கப்பட வேண்டும். விடுபட்டு போன பாடங்களை போதிக்க ஆசிரியர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேற்கண்ட புதிய விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி