மெட்ராஸ் ஹைகோர்ட்டின் பெயரை மாற்ற விரைவில் மசோதா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

மெட்ராஸ் ஹைகோர்ட்டின் பெயரை மாற்ற விரைவில் மசோதா


மெட்ராஸ் ஹைகோர்ட் என்கிற பெயரை மாற்றுவதற்கான மசோதாவை கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தற்போது இயங்கும் உயர்நீதிமன்றம், மெட்ராஸ் ஹைகோர்ட் என்ற பெயரிலும்,மும்பையில் உள்ள நீதிமன்றம் பாம்பே ஹைகோர்ட் என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களின் பெயர்களையும், அந்த பெருநகரங்கள் தற்போது அழைக்கப்படும் பெயர்களுக்கு மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதனையேற்று அவற்றின் பெயர்களை, ஆங்கிலத்தில் சென்னை ஹைகோர்ட் மற்றும் மும்பை ஹைகோர்ட் எனப் பெயர் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.

இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி