ரிசர்வ் வங்கியின் கடன் வட்டிக் குறைப்பு: வீட்டுக்கடன் வட்டி குறைப்பு குறித்து வங்கிகள் இந்த வாரம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

ரிசர்வ் வங்கியின் கடன் வட்டிக் குறைப்பு: வீட்டுக்கடன் வட்டி குறைப்பு குறித்து வங்கிகள் இந்த வாரம் முடிவு


ரிசர்வ் வங்கியின் கடன் வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் வீடுமற்றும் வாகனக் கடனுக்கான வட்டியை குறைப்பது குறித்து முன்னணி வங்கிகள் இந்த வாரத்தில் முடிவை அறிவிக்க உள்ளன.

வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியை ரிசர்வ் வங்கி கால் சதவிகிதம் கடந்த வாரம் குறைத்தது. இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி போன்றவற்றின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யவே வங்கிகள் விரும்புவதாகவும், அதன் மூலம் கடன் வணிகம் அதிகரித்து வங்கிகளுக்கு வட்டி வருவாய் உயரும் என்றும் டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி