மதுரையில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கட்டுமானப் பணிகள் 2015 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உலகத் தமிழச் சங்கம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவித்தார். பின்னர், 1986-இல் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்கி வைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு, டாக்டர் தங்கராஜ் சாலையில் மதுரை அரசு சட்டக் கல்லூரி அருகே 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2011-இல் அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உலகத் தமிழ்ச் சங்கம் புதுப்பொலிவுடன் செயல்படும் என அறிவித்தார். உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது.
உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு பெருந்திட்ட வளாகம் பொதுப்பணித் துறையால் ஒப்பந்தம் விடப்பட்டது, தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. பெருந்திட்ட வளாக முகப்பின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாரம்பரிய தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த வளாகம் அமைக்கப்படுகிறது. இரு தளங்களுடன் கட்டடம் அமைகிறது. 2015 டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி