ஓ.பி.சி., மாணவர்களுக்கு யு.ஜி.சி., உதவித்தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2015

ஓ.பி.சி., மாணவர்களுக்கு யு.ஜி.சி., உதவித்தொகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் நிதி உதவியுடன் கூடிய இத்திட்டத்தை, 2014 - 15ம் கல்வியாண்டு முதல், யு.ஜி.சி., அறிமுகப்படுத்துகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரி கள், குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல், கலையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு களில் முழுநேர, பகுதி நேர, எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்பு களில் சேர்ந்தவர்களுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களில், 300 பேருக்கு மட்டும், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இத்தகவல்களை, யு.ஜி.சி., செயலர், ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி