புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக மாவட்ட அளவில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய மற்றும் நவீன கற்றல், கற்பித்தல் கருவிகள், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் முறைகளை, நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.அங்கு செயல்படும் நவீன கல்வி முறைகள், வகுப்பறைக்கு வெளியே, கலை, உடற்கல்வி, பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகள் ஆகியவற்றை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளை பற்றி www.tnscert.org/innovation என்ற இணையத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மேலும், விவரங்களுக்கு, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரமா பிரபாவை 94444 53987 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி