தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல்.


சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும்உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை கோட்டாட்சியர் (ஆர் .டி.ஒ ) சிதம்பரம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டாட்சியர் ராஜேந்திரன் ,துணை -வட்டாட்சியர் தேர்தல் சேது நம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டாட்சியர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.அடிப்படை கடமைகளில் ஒன்றான வாக்களித்தலை செயல்படுத்துவதற்காக இதுப் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.சுலபமான பதிவு,சுலபமான திருத்த முறைகள் மற்றும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,மிக முக்கியமாக பிழையில்லா வாக்காளர் பட்டியல் பராமரிப்பது உள்ளிட்டவை தினத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளன .மாணவர்களாகிய நீங்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க உள்ளீர்கள்.நீங்கள் பெரியவர்களான பிறகு கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.அதற்காகத்தான் நமது அரசு தேசிய வாக்காளர் தினத்தை பள்ளிகளில் கொண்டாடுகிறது.நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா,அம்மாவிடம் சொல்லி கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள் என அறிவுரை வழங்கினார் .

மாணவர்கள் ராஜேஸ்வரன்,நடராஜன் ,மாணவிகள் மங்கையர்க்கரசி,தனலெட்சுமி ஆகியோர் வாக்களிப்பது,கள்ள ஒட்டு,ஒட்டு அளிக்கும் முறை தொடர்பாககோட்டாட்சியரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.விழாவில் மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.தேவகோட்டை வட்டாட்சியர் ராஜேந்திரன் பேசும்போது,சுதந்தரத்திற்காக உழைத்தவர்களை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.அவர்கள் ரத்தம் சிந்தித்தான் நமக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்துள்ளனர்.அதே போன்று நாமும் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.நீங்கள் அனைவரும் பெரியவர்கள் ஆனதும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.வாக்களிக்க வயது உள்ள அனைவரையும் வாக்களிக்க கட்டாயபடுத்துங்கள் என பேசினார்.அரசு உத்தரவின்படி வாக்களிப்பது எனது உரிமை,எனது கடமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வாக்காளர்களே என்கிற தலைப்புகளில் ரங்கோலி போட்டி,கட்டுரை போட்டி,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடைபெற்றன்.தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் மற்றும் தேவக்கோட்டை வட்டடாட்சியர் ராஜேந்திரன், துணை -வட்டாட்சியர் தேர்தல் சேது நம்பு ஆகியோர் ரங்கோலி போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில் முதல்,இரண்டாம் பரிசுக்குரியவர்களை தேர்ந்து எடுத்தனர்.

ரங்கோலி போட்டியில் முதல் பரிசை ரூபாஸ்ரீயும்,கட்டுரை போட்டியில் முதல் பரிசை கண்ணதாசனும்,ஓவிய போட்டியில் முதல் பரிசை பரமேஸ்வரியும் ,பேச்சு போட்டியில் முதல் பரிசை தனமும் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைவருக்கும் கோட்டாட்சியர் தனது சொந்த செலவில் பரிசு வழங்கினார்.தேவகோட்டை கோட்டாட்சியர்சிதம்பரம்தேர்தல் வாக்களர் உறுதிமொழி கூற அனைத்து மாணவ-மாணவியரும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்.நிறைவாக மாணவி தனம் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி செய்திருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி