மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2015

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது


  1. பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களைஉருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 900கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    *.ஆசிரியர்கள்: பள்ளி, கல்லூரி வகுப்பறையில் அவர்கள் பணியாற்றும் சூழல்; பணி மேம்பாடு ஆகியவற்றை, இத்திட்டம் கண்காணிக்கும்.

    *.பாடத்திட்டத்தை உருவாக்குதல்: மதிப்பிடுதல், திறனாய்வு முறைகளை, வரையறுத்தல்; ஆசிரியர் பணி குறித்த ஆய்வு உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

    *.கல்லூரி, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டறிந்து, திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி அளித்தல், பணியில் இருக்கும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்திற்காக, 30 மத்திய பல்கலைகளில், பள்ளி கல்விக்கான மையங்கள்; பாடத்திட்டம், ஆசிரியர் பணி தொடர்பான, 50 மையங்கள்; ஆசிரியர் கல்விக்கான, இரண்டு பல்கலை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி