அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2015

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்


மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும்வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 6-ஆம்தேதி கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.எனவே, கல்லூரிகள் வரும் 2015-16 கல்வியாண்டில் இத் திட்டத்தை அறிமுகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி