உடற்கல்வி ஆசிரியர் ஊதிய முரண்பாடு விவகாரம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2015

உடற்கல்வி ஆசிரியர் ஊதிய முரண்பாடு விவகாரம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி பாடம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான கல்வித் தகுதியும், பணிகளும், பொறுப்பும் இந்த போதிலும் ஊதியத்தில் மட்டும் பாகுபாடு நிலவி வருகிறது. அதேவேளையில், மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களை நியமனம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.


எனவே இதுபோன்ற ஊதிய முரண்பாடுகளை களைந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க தலைவர் சங்கரபெருமாள் கூறுகையில், “ 6-10ம் வகுப்பு வரையில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். எழுத்து தேர்வு அரசாணை 185ஐ ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட் டம் நடத்தப்படும்“ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி