கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2015

கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.


பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின்நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக விடுமுறை தினத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பள்ளி வேலைநாட்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்தவும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். தேர்ச்சி சதவீதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே பயில்கின்றனர். அவர்களை படிப்பதற்கு கட்டாயப்படுத்தும்போது பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர். இந்த சூழ்நிலையில் 100 சதவீத தேர்ச்சி என்பது இயலாத காரியம். கல்வித்துறை உத்தரவால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

3 comments:

  1. அரசு உதவிபெறும் பள்ளி வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடம்- பணம் தேவையில்லை, பள்ளிக்கூடம் இணைய சேவை

    Post : BT Assist..( 2 nos)

    Subject : History

    Cast : SC(A)Only

    City : Tanjavuur Dist-1
    Thiruvaar Dist-1

    Money - Nooooo....

    Note : 90 and above 90 only... immediately

    Contact : Rajesh Cell : 78456 53540

    ReplyDelete
  2. 9-ஆம்வகுப்புவரை இல்வசமாக எல்லா பாடங்ளுக்கும் 40-மதிப்பெண்கள் வழங்கி 100%தேர்ச்சியும் வழங்கிவிட்டு 10-ஆம் வகுப்பில் மாணவர்களை படி படியென்றால் எப்படிப்படிப்பார்கள்.இதில் ஆசிரியர்களை மட்டும்வேலைநாட்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்தவும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி 100%தேர்ச்சிவேண்டும் என்பதுஎப்படி சாத்தியம்?.பள்ளிக்கு வரவில்லையென்றாலும் மா ணவனை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமாம்.எப்படி சாத்தியமாகும்?

    ReplyDelete
  3. அரசியல் வா (வியா)திகள் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள்,கலை அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்ததன் விழைவே அதிகாரிகள்,100%தேர்ச்சி,100%தேர்ச்சி,என ஆரம்பித்துள்ளார்கள்.அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும்,தனியார் பள்ளிமாணவர்களும்,ஒன்றல்ல.அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளின்நலனில் அக்கரை காட்டுவதில்லை.நிலமை இவ்வாரிருக்க ,ஆசிரியர்களை மட்டும் குறைகூறுவதேன்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி