ஐ.ஏ.எஸ். அதிகாரி மதப் பிரசாரத்தில் ஈடுபடலாமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2015

ஐ.ஏ.எஸ். அதிகாரி மதப் பிரசாரத்தில் ஈடுபடலாமா?

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மதப்பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும், கிறிஸ்தவ மதப் பிரசார கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்றும்  தமிழக அரசின் தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இத்தடை நடவடிக்கைக்கு இந்துத்துவா அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
அதே சமயம் உத்தரவை ஏற்று தான் கலந்துகொள்ள இருந்த கிறிஸ்தவ கூட்ட நிகழ்ச்சிகளை உமா சங்கர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குத் தடை கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும்,  தேவாலயத்துக்குள் நான் பிரசங்கம் மேற்கொள்வது எப்படி தவறாகும்? அது என்னுடைய மத ரீதியான உரிமை. அதை அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசு பணியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மதப் பிரசாரத்தில் ஈடுபடலாமா? உங்களது கருத்து என்ன என்பதை முன்வைத்து விவாதிக்கலாம்.

68 comments:

  1. தனிமனித சுதந்திரத்தை தடை செய்யலாமா?

    ReplyDelete
    Replies
    1. தனி மனிதன் மத பிரசங்கம் தாராளமாகசசெய்யலாம் ... ( திருப்பதி போன்ற பல இந்து சமய கோயில்கள் உள்ள இடங்களிலே மத பிரசங்க தடை உண்டு )....

      ஆனால் உமாசங்கர் தனி மனிதர் அல்ல... IAS அதிகாரி ..

      தற்போது அவர் பணியில் இருந்து கொண்டே மத பிரசங்கம் செய்வது
      தவறு - அரசு பணியாளர் வரன்முறை சட்டம் ......

      Delete
    2. அவரின் இது போன்ற நடவடிக்கை ஆட்சியாளர் என்ற அடிப்படையில் பாரபட்சம் ஏற்படும் என்ற சந்தேகம் பபாமர மக்களுக்கும் ஏற்படும்

      Delete
    3. திரு பாலன் ராமநாதன் அவர்களே,

      IAS என்பதால் அவருக்கு என்று தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இருக்க கூடதா என்ன?? அவரும் இந்திய குடிமகன் தானே. இந்திய அரசியாலமைப்பு சட்டம் என்பது அவர்க்கும் பொருந்தும் தானே.

      Delete
    4. திரு.அலெக்ஸ் ஐயா. அவர் தனிபட்டு மதத்தின் மீது ஈடுபாட்டுடன் இருபப்பதில் எந்த தவரும் இல்லை ஆனால் பிரசங்கம் செய்யும் போது அவர் மாவட்ட ஆட்சியாளர் என்கிற போதும் இது போன்ற சந்தேகம் ஏற்பட வாய்புண்டு மேலும் அவர் மத உணர்வை யாரும் விமர்சிக்க வேண்டாம் மத உணர்வு தவரில் அது வெறியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும் இது அனைவருக்கும் போருந்தும்.நன்றி

      Delete
    5. திரு. பாலன் அவர்களே தமிழக அரசு சின்னம் முத்திரையில் கோவில் கோபுரம் உள்ளதே அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொணடாடப்படுகிறதே இதையெல்லாம் வைத்து அரசை குறை கூறிவிட முடியுமா? அதேபோல்தான் இதுவும் நண்பரே.

      Delete
    6. Libby அவர்களே. .
      கலாச்சாரம் என்ற பெயரால் அரசு முத்திரையாக கோவில் கோபுரத்தை பயன்படுத்துவது எனது கண்ணோட்டத்தில் தவறே. ...

      இதனை வழக்காக பதிவும் செய்யப்பட்டது. ஏனோ தள்ளுபடியும்
      செய்யப்பட்டது ..

      ஆயுதபூஜை - தனக்கு வாழ்வளிக்கும் கலன்களை சுத்தம் செய்து "அந்த கலன்களை " வணங்கிடும் நாள் ... அனைத்து தொழில்சார் மக்களும் வணங்கலாம் .. தவறில்லை ...

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. லிப்பி அவர்களே நீங்கள் மேலே கூறியவை நீண்ட விவாததிற்கு உள்ளது நம் தலைப்பு வேறு அவர் மதபிரச்சாரம் செய்தால் அது அவரின் தனிபட்ட செயல் ஆகாது உத்தரவு பிறபிக்கும் அதிகாரமுள்ள பதவி என்பதால் விமர்சனதுக்குள்ளளாகிறது

      Delete
    9. எனது அலுவலகத்தில் என்னை காண வந்தவர்களுக்கு கிருத்துவ முறையில் சிகிச்சை அளித்து சுகமளித்தேன் . அவர்களது தலை வலி , அல்சர் போன்ற தீராத வியாதிகளை சரி செய்தேன் -
      திரு .உமாசங்கர் IAS .
      ஆதாரம் தந்தி நியூஸ் ஆயுத எழுத்து .
      (இதற்க்கு அவர் கூறும் காரணம் IAS. ஆன என்னை தற்போது உப்புசப்பில்லாத பணியை ஒதுக்கி உட்கார வைத்துள்ளனர்.நானும் எனது மனமும் "வேலையின்றி " உள்ளது .
      எனது கேள்வி - மாமதுரையில் நடந்த மாபெரும் கிரானைட் ஊழலை அப்பபோதை ஆட்சி தலைவர் திரு.சகாயம் அவர்கள் வெளி கொணர்ந்தார். அவரை அரசு கோ ஆப் டெக்ஸ் க்கு பந்தாடியது. நான் கோ ஆப் டெக்ஸ் ல் வேலையின்றி வெட்டியாக உள்ளேன் என்று வேறு வேலைகளில் ஈடுபட்டாரா ? இல்லையே..... கோ ஆப் டெக்ஸ் ல் தனது அறிவை பயன்படுத்தி முன்னேற்ற செய்தார் )
      பணி நேரத்தில் ஒரு அரசு பணியாளர் இவ்வாறு செய்வது முறையா ????

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அது பிற மத்த்தை சேர்ந்தவர்களுக்கு அல்ல கிறிஸ்தவ. மத்த்தை. சேர்ந்தவர்களுக்கு தான் விளம்பரம்

    ReplyDelete
  4. பதவியில் இருக்கும் போது மத பிரச்சாரம் தவறு- 68% மக்கள் ( தந்தி நியூஸ் ஆயுத எழுத்து. .. .


    அப்புறம் என்ன ------ க்கு இந்தியாவை ஆளும் மக்களின் பிரதிநிதிகள் " பகவத்கீதை " மீது சத்தியம் செய்து பதவி ஏற்கின்றனர் ????
    விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்
    ( தந்தி சேனல் -ஆயுத எழுத்தில் கலந்து கொண்டவர் )

    பகவத்கீதை இந்து நூலே அல்ல - ராகவன்
    பா ஜ க பிரமுகர் .....

    பகவத்கீதை இந்தியாவின் புனித நூல் - உஸ்மா சுவராஜ் ....


    68% மக்களே .....
    உங்களுக்கு நாயகன் டயலாக் தான் ....
    அவனை நிறுத்த சொல்- நான் நிறுத்துறேன்....

    ReplyDelete
    Replies
    1. Maamiyar vudaithaal mankudam aanaal marumagal vudaithal ponkodama?

      Delete
    2. யார் உடைத்தாலும் தவறே...

      அவரவர் பானையை பத்திரமாக பார்த்து கொள்வதும் , அடுத்தவர் பானையை உடைக்காமல் பத்திரமாக காப்பதும் நமது கடமை ... நன்றி

      Delete
  5. தனி மனித மற்றும் மத சுதந்திரம் .எங்கு வேண்டுமானாலும் சமய கருத்துக்களை
    பிரசங்கம் பண்ணலாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ODC ராஜா அவர்களே. ....

      அரசு அதிகாரிகள் சமய & மத கருத்துக்களை பிரசங்கம் செய்ய கூடாதென்று " அரசு பணியாளர் வரன்முறை சட்டம் " உள்ளதாக இன்று தந்தி - ஆயுத எழுத்தில் காட்டினார்கள்

      Delete
    2. Ade sattam thaan anaithu matha sattangalayum vazhimozhigiradu

      Delete
  6. நண்பர் மணியரசரே ....
    சூப்பர் மேட்டரை ஏனையா கீழே போட்டிள்ளீர்???
    நாளை முழுவதும் இதை முதல் தலைப்பாக்குமய்யனே.....
    எதிர்பார்த்திருப்பேன். ....
    நன்றி .....

    ReplyDelete

  7. ​​​இயேசுவின் அன்பை சொல்வது தனி மனித சுதந்திரம் 

    மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில இந்து அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய அரசியல் சாசன சட்டப்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஏனென்றால் மதத்தை பிரச்சாரம் செய்வதும், இயேசுவின் அன்பை பிறருக்கு சொலவதும் தனி மனித சுதந்திரம். இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19 மற்றும் பிரிவு 25 –ல் இது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும், கிறிஸ்தவர்கள் மற்றும் திருச்சபைகள் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டிய தனி மனித சுதததிர சட்டங்கள். 

    THE CONSTITUTION OF INDIA - Right to Freedom Article 19: 
    Protection of certain rights regarding freedom of speech, etc.— (1) All citizens shall have the right— (a) to freedom of speech and expression; (b) to assemble peaceably and without arms; (c) to form associations or unions; (d) to move freely throughout the territory of India; (e) to reside and settle in any part of the territory of India

    இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 19:
    இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் சுதந்திரமாக பேசலாம். ஆயுதம் இல்லாமல் ஒரு கூட்ட மக்களை சேர்த்தும் பேசலாம். இயேசுவை பற்றி பேசுவதற்கும் சொல்வதற்கும் ஒரு தனி மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் இந்திய அரசாங்கம் அளிக்கின்றது. எந்த இடத்திற்கும் சென்று இயேசுவைப் பற்றி பேசலாம்.

    THE CONSTITUTION OF INDIA - Right to Freedom of Religion 25:
    Freedom of conscience and free profession, practice and propagation of religion.—(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion. (2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law— (a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice; (b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus. Explanation I.—The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion. Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

    இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 25:
    இந்தியாவிலுள்ள எந்த மனுஷனும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பரப்பலாம். அதாவது இந்திய அரசியல் சாசன சட்டப்படி, மதத்தை பிரச்சாரம் செய்வது தனிமனித சுதந்திரம். மதமாற்றம் என்பது கொலைக்குற்றம் அல்ல. 

    இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது உங்களை யாராவது ஏளனம் செய்தாலோ அல்லது தாக்க முற்ப்பட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நமக்கு முழு அதிகாரமும் உண்டு. மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்துவ சபைகள் நாளுக்கு நாள் நெருக்கப்படுகின்றது. இதையெல்லாம் கண்டு பயந்து அமைதியாயிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. தவறு செய்கின்றவர்கள் கோர்டில் வாய்தா வாங்கிக்கொண்டு தொடர்ந்து தவறு செய்து வருகையில், எல்லோருக்கும் நன்மைகள் செய்கின்ற கிறிஸ்தவர்கள் நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். இயேசு நல்லவர் என்று செல்லும் இடமெல்லாம் சொல்லிடுவோம். அகிலமெங்கும் இயேசுவின் அன்பை பரப்பிடுவோம்.






    ​    ​​​​​​​​​​​

    ReplyDelete
    Replies
    1. இந்து - ஆதிதிராவிடர் என சான்றிதழ் அளித்துள்ளார் .. அதன் மூலம் அரசு பணியில் உள்ளார் ....

      அவர் மீதான குற்றச்சாட்டு ...

      Delete
    2. Adhi dravidarkalai muthala kovilukku ulla vidunga .apram avangala indhu mathathula serunga...

      Delete
    3. தனிமனித சுதந்திரம் இது...பல வந்தேறிகளும் பல பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் இணைந்து தலித் மக்களை புறம் தள்ளும் செயல் இது....

      இந்தியக்குடிமகன் எங்குவேண்டுமானாலும்,எந்த மதத்தைய்ய்ம் பின்பற்ற ஊறுவிளைவிக்காத வகையில் பிரச்சாரம் செய்ய அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று...

      மதவாத பா.ஜ.க அன்று கிறிஸ்துமஸ் நாள் விடுமுறையல்ல என புரளிகட்டியது...இன்று கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்கிறார் என குற்றம் சாட்டுகிறது...

      Delete
    4. நண்பர் ஜெகநாதன் அவர்களே ....
      இந்து சமயத்தை பின்பற்றும் அனைவரும் அனைத்து கோவில்களிலும் சமய வழிபாடு செய்ய தடை இல்லை ....
      சமூகவிரோத சக்திகள் தடுக்கும் பட்சத்தில் அரசு & நீதிமன்றம் வழிகாட்டும்....

      Delete
  8. Everyone has rights to do their work... I. A. S or anyone he is human being.... He has freedom... I

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ...
      கீழே உள்ள எனது பதிவுகளுக்கு பதில் உண்டா உங்களிடமாவது ???

      அனைத்து சலுகைகளையும் உங்கள் மதத்தில் அனுபவித்து விட்டு , வேற்று மத பிரச்சாரம் சரியா நண்பரே ???

      தனி மனிதனும் , அரசு பணியாளர்களும் ஒன்றல்ல. ...

      திரு.உமாசங்கர் அவர்கள் தான் கிருத்துவர் என தனது சான்றிதழ்களில் மாற்றினாலும் , மத பிரச்சாரம் செய்வது தவறே...
      அரசு பணியில் இருந்து கொண்டு மத பிரசங்கம் தவறு என "அரசு பணியாளர் வரன்முறை சட்டம் " சொல்கிறது ....


      Delete
  9. தலித் என்பதால் உமாசங்கரை பழிவாங்குகிறது தமிழக அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு


    ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் தலித் என்பதால் தமிழக அரசு அவருக்கு சரியான பதவி அளிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறியதாவது:

    ''உமாசங்கர் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி. தலித் என்பதால் அவருக்கு சரியான பதவி அளிக்காமல் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அவருக்கு உரிய பணியை ஒதுக்கி இருந்தால், இறை பணிக்கு சென்றிருக்கமாட்டார்.

    கன்னியாகுமரியில் ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும்போது, உமாசங்கரின் கார் உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜலிங்கம் அவர்களே...

      திரு .உமாசங்கர் அவர்கள் இந்து -ஆதிதிராவிடர் சான்றிதழ் மூலம் IAS பணி வாய்ப்பினை பெற்றுக்கொண்டு , தற்போது வேறு மதம் பற்றி பிரச்சாரம் செய்வது தவறு & இது அவரது மதத்திற்கு செய்யும் துரோகம் - ராகவன் பாஜக ....

      இதற்கு பதில் உண்டா நண்பரே????

      திரு .உமாசங்கர் தனி மனிதர் அல்ல. அவர் ஒரு அரசு பணியாளர் .
      இதை
      மறுக்கிறீரா நீங்கள் ?????

      Delete
    2. நண்பர் ராம் ராம் அவர்களே...
      இந்துவில் பிறந்த ஒருவர் எம்மதத்தையும் பின்பற்றலாம் வற்புறுத்தல் இல்லாமல்...

      மேலும் நண்பரே இந்து குடியுரிமை உள்ளவர் மற்ற மதத்தை பிரச்சாரம் செய்யக்கூடாதேன சட்டம் ஏதேனும் உள்ளதா???

      அப்படியானல் பா.ஜ.க கருத்துப்படி இந்துவில் பிறந்த சமய ஒற்றுமைக்காக பிரச்சாரம் செய்த கபிர்,தயானந்த சரஸ்வதி,புத்தர்,குருநானக்,இராமனுசர்,இராமனந்தர் ஆகியோர்களும் குற்றவாளியா???

      Delete
    3. நான் ஓரு அரசு ஆசிரியர் நான் இந்து மதம் சார்ந்த அமைப்புகளில் பிரச்சாரம் செய்யலாமா

      Delete
  10. ஒ வதமான ெச: இத .ஆ. -ஆ இஎதைன,எதைன ேப பாகபடேபாறாகேளா? 97 மெப எ ேவைல ைடகைல, மைப சாதைடகைல, ச தைமக அவலகலாவ ைட என சேதாஷப ேந நக மாவட தைம க அவலக ெச ேகடா அசாத பறகெசய யைல என   அ டன எகைளேபா பல  அபபடன, ஏ இத ெகாைல ெவேயா ெசய பற இத .ஆ. ,  எ ெசறா சாத ைட, காலா?.ஆ.- ேய ..... வாக  வாக..... ஏ எறா இஎதைன ேபைர கா வாக காறாேயா?கடதா ெவச...

    ReplyDelete
  11. The right to freedom of religion is a fundamental right guaranteed under Article 25 of the Constitution of India. Article 25 reads as follows:-
    25 (1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.o

    ReplyDelete
  12. சரத்து 25 ல் மத சுதந்திரம் பற்றிதான் குறிப்பிட பட்டுள்ளது.அதாவது பாகிஸ்தான் போன்று அல்லாமல் இந்தியாவில் உள்ளவர்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளலாம்.

    சரத்து 25 இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதைத் தெளிவு படுத்துகிறது.அவ்வளவுதான்!

    ஆனால் திரு.உமாசங்கர் IAS மேற்கொள்வது?

    ReplyDelete
    Replies
    1. பிரச்சாரம் என்றால் என்ன?

      Delete
    2. இந்தியா பல மதங்கள் நிறைந்த நாடு இருந்தாலும் நாம் இன்று வரை சகோதரர்களாக நண்பர்களாக சாதி மத இனம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் நான் இங்கே சில கருத்துகளை பதிவிடுகிறேன் தவறாக இருந்தாலோ இல்லை யார் மனசையாவது புண்படுத்தினாலோ என்னை மன்னியுங்கள் .நாம் 65 வது குடியரசு தினம் கொண்டாடி 3 நாட்கள் கூட முடிவடைய இல்லை .நம்மை ஆங்கிலேயர்கள் 400 ஆண்டுகள் ஆண்டு வந்தார்கள் .ஏன் என்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை .அவர்கள் நம் நாட்டிற்கு வணிகம் செய்வதற்கே வந்தார்களே தவிர நம்மை அடிமை படுத்த இல்லை . ஏசு நாதர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் பெத்தலேஹேம் என்னும் ஊரில் மனிதனோடு மனிதனாக பிறந்து நமக்காகவும் நாம் செய்த பாவங்களுக்காகவும் 33 அரை வயதில் அவர் பிறப்பின் படியேயும் அவர் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரத்துக்கு போனார் ..ஆக ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை .இது மதமாற்றம் இல்லை .எந்த ஒரு மதத்தையும் பேசவும் மதம் மாறவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு கடவுளுடைய விஷயங்களில் அரசியல் பேசாதிர்கள். சில நல்ல ஆங்கிலேய மனிதர்களும் நம்மை ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களிடம் மனிதமும் அன்பும் இல்லையெனில் நம் இந்தியா இனமே கிடையாது . ஒவ்வொரு கிறிஸ்தவனும் உயிர் வாழ்வதே ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை. இதை உமாசங்கர் செய்தது துளிகூட தவறு இல்லை .அன்று நம்மிடையே ஒற்றுமை இல்லாததினால் மட்டுமே வேறு நாட்டினர் நம்மிடையே ஆட்சி செய்து வந்தனர் .சில சமய வெறிபிடித்த அரசியல் ,கட்சிகளை ,இடம் கொடுத்து விட்டு நம் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் விட்டு கொடுக்காதீர்கள் நண்பர்களே நாம் இந்த உவ்லகத்தில் வாழ்கிற காலம் மிகுவும் குறைவு அதை சந்தோஷமாக சமாதானமாகவும் ஒற்றுமையாக வாழ்வோம். நன்றி!!!

      Delete
  13. மதமாற்றம் என்று இந்தியாவில் நடக்க காரணமாக இருந்தவர்கள் யார்??
    அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்????

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா
    1) இந்தியாவின் வளத்தின் மீது மட்டுமே குறியாக கொண்டு இந்தியாவின் மீது போர் தொடுத்த வேற்று நாட்டினர் ....
    2) இந்துவாக இருந்தாலும் நீ தாழ்ந்த இந்து திணிக்கப்பட்ட "உயர்சாதியினரின் ஆதிக்க வெறி"

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு ராம் ராம். எப்படி இருக்கிறீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கருத்துக்கள் பரிமாரிக்கொள்கிறோம். நன்றி.

      திரு அம்பேத்காரின் சில வரிகள்;
      கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

      உண்மை வேற்று நாட்டின் இந்தியாவின் வளங்களை கொள்ளையாடிக்கவே வந்தனர் அவர்களின் மதங்களை பரப்ப அல்ல
      இங்கு இந்து மக்கள் தங்கள் நாட்டிலேயே குறிப்பிட்ட சமூகத்தால் வெறுத்து ஒதுக்கம் போது, கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையே இந்து மக்களுக்கு மத மாற்றத்துக்கு காரணமாக இருந்தது

      Delete
    2. மதிப்பிற்குரிய உண்மையான தங்களது மேற்கண்ட வார்த்தைகளை முழுவதையும் பணிந்து ஏற்கிறேன்... நன்றி

      ஆனால் பிரச்சினை "ஓர் அரசு அதிகாரி மத பிரசங்கம்" செய்வது தான் ... எனது 09;50 பதிவுக்கான பதில் தாங்களிடம் திர்பார்க்கிறேன்  

      Delete
    3. திரு உமா சங்கர் அவர்கள் இந்துவில்ப்பிறந்து வெளிப்படையாக உண்மையாக கிறிஸ்துவத்தை நேசித்து அம்மத்ததின் கருத்துக்களை மக்களின் முன்பாக பேசுகிறார்...

      ஆனால் மோடி அவர்கள் இந்துவில் பிறந்து மக்களை கவர்வதற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கிறிஸ்துவின் கொள்கைகளுல் முக்கியமானது அன்பு,ஈகை,பொறுமை என அதை பின்பற்றி நல்வழி செல்ல ஆகோ ஓஒகோ அப்படி இப்படினு கதை விடுகிறாரே அவருக்கு இந்த உமாசங்கர் பரவாயில்லை...

      Delete
    4. இந்தியா பல மதங்கள் நிறைந்த நாடு இருந்தாலும் நாம் இன்று வரை சகோதரர்களாக நண்பர்களாக சாதி மத இனம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் நான் இங்கே சில கருத்துகளை பதிவிடுகிறேன் தவறாக இருந்தாலோ இல்லை யார் மனசையாவது புண்படுத்தினாலோ என்னை மன்னியுங்கள் .நாம் 65 வது குடியரசு தினம் கொண்டாடி 3 நாட்கள் கூட முடிவடைய இல்லை .நம்மை ஆங்கிலேயர்கள் 400 ஆண்டுகள் ஆண்டு வந்தார்கள் .ஏன் என்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை .அவர்கள் நம் நாட்டிற்கு வணிகம் செய்வதற்கே வந்தார்களே தவிர நம்மை அடிமை படுத்த இல்லை . ஏசு நாதர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் பெத்தலேஹேம் என்னும் ஊரில் மனிதனோடு மனிதனாக பிறந்து நமக்காகவும் நாம் செய்த பாவங்களுக்காகவும் 33 அரை வயதில் அவர் பிறப்பின் படியேயும் அவர் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரத்துக்கு போனார் ..ஆக ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை .இது மதமாற்றம் இல்லை .எந்த ஒரு மதத்தையும் பேசவும் மதம் மாறவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு கடவுளுடைய விஷயங்களில் அரசியல் பேசாதிர்கள். சில நல்ல ஆங்கிலேய மனிதர்களும் நம்மை ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களிடம் மனிதமும் அன்பும் இல்லையெனில் நம் இந்தியா இனமே கிடையாது . ஒவ்வொரு கிறிஸ்தவனும் உயிர் வாழ்வதே ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை. இதை உமாசங்கர் செய்தது துளிகூட தவறு இல்லை .அன்று நம்மிடையே ஒற்றுமை இல்லாததினால் மட்டுமே வேறு நாட்டினர் நம்மிடையே ஆட்சி செய்து வந்தனர் .சில சமய வெறிபிடித்த அரசியல் ,கட்சிகளை ,இடம் கொடுத்து விட்டு நம் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் விட்டு கொடுக்காதீர்கள் நண்பர்களே நாம் இந்த உவ்லகத்தில் வாழ்கிற காலம் மிகுவும் குறைவு அதை சந்தோஷமாக சமாதானமாகவும் ஒற்றுமையாக வாழ்வோம். நன்றி!!!

      Delete
    5. திரு ராம் ராம் அவர்களுக்கு,

      Preface of THE CONSTITUTION OF INDIA

      WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a 1[SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC] and to secure to all its citizens:

      JUSTICE, social, economic and political;

      LIBERTY of thought, expression, belief, faith and worship;

      EQUALITY of status and of opportunity; and to promote among them all

      FRATERNITY assuring the dignity of the individual and the 2[unity and integrity of the Nation]; IN OUR CONSTITUENT ASSEMBLY this twentysixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

      இந்திய அரசியாலமைப்பு சட்டத்தின் முகப்பரையை பதிவு செய்கிறேன்.

      அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை இந்திய அரசியாலமைப்பு சட்டம் உறுதி செய்ய வேண்டும்.

      LIBERTY of thought, expression, belief, faith and worship;
      கருத்துக்களின் சுதந்திரம்,
      பேச்சு சுதந்திரம்
      உணர்வுகளின் சுதந்திரம்
      சமய உணர்ச்சிகளின் சுதந்திரம்
      வழிபாடுகளில் சுதந்திரம்.

      இந்த சட்டம் ஒரு சாதாரண குடிமகனிலிருந்து இந்தியாவின் உயர்ந்த பதவியிலுள்ள ஜனாதிபதி வரைக்கும் இந்த சட்டம் ஒன்று தானே.

      அவர் IAS பதவி பெறும் போது எந்த மதத்தை பின்பற்றினார் என்பது அவருடைய சுதந்திரம், அதே போல் இப்போதும் எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்பது அவருடைய சுதந்திரம். அவருடைய தனி மனிதசுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. இதை இந்திய அரசியாலமைப்பு சட்டம் தெளிவுபட கூறியாருக்கிறது.

      Delete
    6. இனிய காலை வணக்கம் ஐயா ....
      அரசு பணியாளர்கள் மத பிரச்சாரம் செய்ய சட்டத்தில் இடம் உண்டா? இல்லையா
      ?
      நேரடியான பதில் எதிர்பார்க்கிறேன் . நன்றி

      Delete
    7. திரு ராம் ராம்

      மதம்! என்பது மனிதண் மனிதணாக வாழ்வதற்க்கு என்ற சித்தாந்தம் கொண்டவன் நான் இந்து ஆலயங்களுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்தால் எனக்கு தெரிந்த தெய்வங்களை மனதில் கொண்டு திருநீரு வைத்துக்கொண்டு பிராரர்த்திப்பவன்,அதே போல மற்ற எல்லா தெய்வங்களும் எனக்கு ஒன்று தான்.

      மதத்தை மனதில் கொள்பவன். மேலும் இதைப்பற்றி தர்கித்து என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் சுருக்கிக்கொள்ள விரும்ப வில்லை. மண்ணிக்கவும்

      Delete
    8. உத்தர்காண்ட் ல் கடும் வெள்ளம் வந்து மக்கள் மடிவார்கள் . காரணம் அங்கே உருவ வழிபாடு செய்கிறார்கள் -இப்படி இயேசு எனது கனவில் சொன்னார்

      இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சாளர் அவர் . அதனாலேயே அவர் மீது கல்லெறியப்பட்டது -ராகவன் பாஜக ...

      அரசின் உயரிய பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு பேசுவது தான் என்னை வருத்தத்தை உண்டு செய்தது .தனது மதத்தை உயர்வாக பேச தனி மனிதனுக்கு உரிமை உண்டு . ஆனால் மற்ற மதத்தை சீண்டுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் தானே ....
      எனது அலுவலகத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் மாற்றம் இருக்கும் . பத்து வருட எனது பணி அனுபவத்தில் 3 அதிகாரிகளை கண்டேன் . அரசு பணியில் உள்ள அதிகாரி தன் இனத்தவர்கே முன்னுரிமை அளிக்கின்றனர் . அதனாலேயே திறமை இருந்தும் கீழேயே தள்ளப்பட்டேன் . அந்த கோபமே இங்கே வெளிப்பட்டது ....

      உயரிய பொறுப்பில் உள்ளோர் ,அரசு பணியாளர்கள் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் அரசிடம் தான் பெரும் ஊதியத்திற்கு உழைக்காமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுதலும் கூட....
      தங்களை மனம் நோக எனது கருத்துக்கள் அமைந்து இருந்தால் என்னை தயவு கூர்ந்து மன்னிக்கவும் ஐயா. நன்றி ...

      Delete
    9. Dear Mr Ram Ram

      You are not at all hurting me Mr Ram Ram

      இது ஒரு சர்ச்சைக்கு உரிய விவாதம் தான். இந்த விவாதத்தை மதக்கோட்பாடு அடிப்படையில் எடுத்துக்கொண்டு விவாதித்தால் மற்றவர்கள் மனதை புண்படுத்திவிடும் என்ற நோக்கத்தில் தான் நான் மேலும் விவாதிக்க தயக்கம் காட்டினேன்.

      இதே ஆட்சியாளர் வேறு மதத்தை பற்றி பிரசங்கித்திருந்தால், என்னால் விவாதத்தை தொடர்ந்திருக்க முடியும். ஆனல் நான் கிறிஸ்த்துவ பெயர் கொண்டு இருப்பதால் தொடரமுடியவில்லை.

      இருந்தாலும் மதத்தின் போர்வை போர்த்திக்கொண்டு, மீண்டும் ஒரு தீண்டாமை என்ற கொடிய நோய் நம்மை தீண்டிவிடக்கூடாது நன்பரே. இதைப்புரிந்துகொண்டு படித்த அனைவரும், தொடக்கத்திலே இந்த மதம் சாயம் பூசிக்கொண்டு நம் மத்தியில் உலா வரும் மாய அரசியலை புரம் தள்ளிவிடவேண்டும்.

      மதம் என்பதை மனதில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களை தீண்டும் மதப்பற்று கொண்டவர்களாக இருந்துவிடக்கூடாது. ஏனெனில் அனைத்து மதங்களும் அன்பை பற்றி மட்டுமே அறிவுறுத்துகின்றன.

      மீண்டும் ஆரோக்கியமான விவாதத்தில் சந்திப்போம்


      நன்றி திரு ராம் ராம்.

      Delete
    10. நன்றி ஐயா ...

      Delete
  15. Ella mathankalilum saathi verupaadu
    irukkirathu..............!!!!!!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. நண்பர் ராம் ராம் அவர்களே அரசுப்பணியாளர் வரன்முறை சட்டம் பெறிதா இந்திய அரசியலமைப்பு பெறிதா???

    மேலும் ஒருமதத்தில் இருந்துகொண்டு அந்நபர் வேறொரு மததிற்கு பிரச்சாரம் செய்யக்கூடாதென அரசியலமைப்பில் சரத்து,சட்டம் உள்ளதா?????

    இதற்கு பதில் சொல்லுமா?? PJB

    ReplyDelete
    Replies
    1. மனிதன் உயிர் வாழ தேவை மூளை யா அல்லது இதயமா ?????
      அது போல இரண்டு சட்டமும் அவசியம் . ..
      இரண்டு சட்டங்களும் மிக தெளிவாக உரைப்பது ஒன்றே ...
      பிடித்த மதத்தை பின்பற்று . அரசு ஊழியன் பிரசங்கம் செய்யாதே ...

      என் வாதம் பின்பற்றவும் ,பிரசங்கம் செய்யவும் முடிந்த அவரால் ஏன் தான் ஒரு கிருத்துவர் என சான்றிதழ் வாங்கவில்லை ??
      ஆக சலுகைக்கு ஒரு மதம் , பிரசங்கம் வேறு மதம் - இது சரியா நண்பரே ??

      அவர் கிருத்துவராக சான்று பெற்றாலும் "அரசு பணியாளர் பிரசங்கம் செய்தல் தவறு"...

      Delete
    2. ஹிந்துக்கள் மத்தில்
      நின்று மத
      போதனை செய்யவில்லை
      கிறிஸ்தவர்களால்
      நடத்தப்பட்டு கிறிஸ்தவர்கள்
      மட்டுமே பங்கு பெரும்
      ஜபகுட்டம் இதில்
      உமா சங்கர்
      பங்கு கொள்வதில்
      தவறு இல்லை

      Delete
    3. correcta sonnenga libby

      Delete
  18. இந்தியா பல மதங்கள் நிறைந்த நாடு இருந்தாலும் நாம் இன்று வரை சகோதரர்களாக நண்பர்களாக சாதி மத இனம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் நான் இங்கே சில கருத்துகளை பதிவிடுகிறேன் தவறாக இருந்தாலோ இல்லை யார் மனசையாவது புண்படுத்தினாலோ என்னை மன்னியுங்கள் .நாம் 65 வது குடியரசு தினம் கொண்டாடி 3 நாட்கள் கூட முடிவடைய இல்லை .நம்மை ஆங்கிலேயர்கள் 400 ஆண்டுகள் ஆண்டு வந்தார்கள் .ஏன் என்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை .அவர்கள் நம் நாட்டிற்கு வணிகம் செய்வதற்கே வந்தார்களே தவிர நம்மை அடிமை படுத்த இல்லை . ஏசு நாதர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் பெத்தலேஹேம் என்னும் ஊரில் மனிதனோடு மனிதனாக பிறந்து நமக்காகவும் நாம் செய்த பாவங்களுக்காகவும் 33 அரை வயதில் அவர் பிறப்பின் படியேயும் அவர் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பரத்துக்கு போனார் ..ஆக ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை .இது மதமாற்றம் இல்லை .எந்த ஒரு மதத்தையும் பேசவும் மதம் மாறவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு கடவுளுடைய விஷயங்களில் அரசியல் பேசாதிர்கள். சில நல்ல ஆங்கிலேய மனிதர்களும் நம்மை ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களிடம் மனிதமும் அன்பும் இல்லையெனில் நம் இந்தியா இனமே கிடையாது . ஒவ்வொரு கிறிஸ்தவனும் உயிர் வாழ்வதே ஏசுவின் பிறப்பை பற்றியும் அவர் பட்ட பாடுகளையும் பற்றி கட்டாயம் மற்றவர்களிடம் பேச வேண்டும் இல்லையெனில் அது அவனுக்கு பாவம் இது அவருடைய கடமை. இதை உமாசங்கர் செய்தது துளிகூட தவறு இல்லை .அன்று நம்மிடையே ஒற்றுமை இல்லாததினால் மட்டுமே வேறு நாட்டினர் நம்மிடையே ஆட்சி செய்து வந்தனர் .சில சமய வெறிபிடித்த அரசியல் ,கட்சிகளை ,இடம் கொடுத்து விட்டு நம் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் விட்டு கொடுக்காதீர்கள் நண்பர்களே நாம் இந்த உவ்லகத்தில் வாழ்கிற காலம் மிகுவும் குறைவு அதை சந்தோஷமாக சமாதானமாகவும் ஒற்றுமையாக வாழ்வோம். நன்றி!!!

    ReplyDelete
  19. சரியாக சொன்னீர்கள் நன்பரே..... மனிதன் மீட்பு பெற உயிரையே கொடுத்த இயேசுவின் அன்பை சொல்வதில் தவறில்லை.

    ReplyDelete
  20. thank u s.k avargaley

    ReplyDelete
  21. intha vaai sadalkal ingu mattum than naddakkum..... Bharat mathaki Jai......

    ReplyDelete
  22. இங்கு யாரும் சண்டையிடவில்லை நண்பர் மணி குமார் அவர்களே.. மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்களையும் எங்கள் உரிமைகளையுமே பதிவிட்டேன். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  23. மதத்தாலும், சாதியாலும் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் தயவு செய்து இதை படிக்க வேண்டாம், அதாவது மதவெறியர்களும், சாதிவெறியர்களும் இதைப் படிக்கவேண்டாம்:

    ஒரு சிலவற்றை படிக்கும் போதும், சிலவற்றைப் பற்றி கேள்விப்படும்போதும், படித்த முட்டாள்களும், மதவெறியர்களும் சாதிவெறியர்களும் இன்னும் சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. நானும் ஒரு மதத்தை சார்ந்திருப்பதால், ஒரு மதத்திற்கு சாதகமாகவும் மற்றதற்கு பாதகமாகவும் எனது பகிர்வு இருக்காது. ஒரு மனிதனை இழிவுபடுத்துவது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு மானங்கெட்ட சாதியாக இருந்தாலும் சரி அதை நான் அடியோடு வெறுக்கிறேன். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து நமது தமிழ்நாட்டையே சூறையாடும் அரசியல்வாதிகளை தட்டிக்கேட்பதற்கு எந்த ஆம்பலையும் இல்லை. இது ஒரு தனி மனிதருக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்ட வன்முறை அல்ல ஒரு மதத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறியாட்டம். ஒன்றை எல்லோரும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரி இந்துமதவெறியர்களும், பார்ப்பனியர்களும். எனக்கு பதில் சொல்லுங்கள், இதே அரசு அதிகாரி இந்து மத்ததைப் பற்றி பேசியிருந்தால் இப்படி அவர் மீது வன்முறை அவிழ்த்துவிடப்பட்டிருக்குமா? எத்தனை அம்பேத்கர்கள் வந்தாலும், எத்தனை பெரியார்கள் தோன்றினாலும் மானங்கெட்ட சாதி வெறியர்களும், மத வெறியர்களும் திருந்தப் போவதில்லை. அரசு அதிகாரி மத்ப்பிரச்சாரம் செய்யக்கூடாது நடுநிலமையோடு நடந்துகொள்ளவேண்டும் என்றால், அரசு அதிகாரிகளுக்கென்று இந்த ஒரு சட்டம் மட்டும் தான் நாட்டில் உள்ளதா? மக்களின் வரிப்பணத்தை வாங்கிக்கொண்டு மக்களுக்காக நடக்கிற அரசாங்கமா இது.... மக்களின் வரிப்பணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்று எவனாவது கேள்வி கேட்டானா? சரியான சாலைகள் இல்லை, எங்கு பார்த்தாலும் குப்பை.... திருட்டு, கொள்ளை, லஞ்சம், நாளுக்கு நாள்அதிகரித்துவரும் நோய்கள், சாலைவிபத்துககள், மருத்துவத்துறை கொள்ளையடிப்பதற்காக குழித்தோண்டி புதைக்கப்பட்ட இயற்கை மருத்துவம், எங்கு பார்த்தாலும் சிறுக சிறுகஉடலைக்கொள்ளும் உணவுகள், தண்ணீர் பற்றாக்குறை, பூமி வெப்பமயமாதல், விலைநிலங்களாகும் விளைநிலங்கள் இன்னும் எண்ணற்றவை..... இவற்றையெல்லாம் பற்றி எவனாவது கவலைப்பட்டானா, ஒரு கேள்வியாவது கேட்டானா.... இவற்றையெல்லாம் நமது சமூகத்தில் அனுமதித்தது யார் நம்மை ஆளும் அரசியல்வாதிகளும், இந்த அரசு அதிகாரிகளும்தானே தானே. மதவெறியர்கள் மதத்தை மட்டும் தானே கட்டி அழ முடியும். இங்கு உயிரேப் போகிறது, மடையர்கள் ஒன்றுக்கும் உதவாததைப் பேசி மதவெறியை பிரச்சாரம் செய்கிறார்கள். வாழ்க
    உங்கள் உன்னதத்தொண்டு.

    ReplyDelete
  24. இது எப்படிதவறாகும்

    ReplyDelete
  25. Sir,

    Shri Umashankar IAS, should not profess Christianity according to the Constitution(Scheduled Caste) Order 1950. According to this Order- para 2-the person should have born in a caste included in the schedule and according to para 3 - he should profess only Hinduism. This Para clearly states that ...........notwithstanding anything contained in para 2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be member of Scheduled Caste. The Hon'ble Supreme Court also has confirmed this.

    He has full liberty to profess Christianity, but he cannot continue in IAS.
    The person affected due to his act is only Dalit Hindus.

    ReplyDelete
  26. Sir,

    Shri Umashankar IAS, should not profess Christianity according to the Constitution(Scheduled Caste) Order 1950. According to this Order- para 2-the person should have born in a caste included in the schedule and according to para 3 - he should profess only Hinduism. This Para clearly states that ...........notwithstanding anything contained in para 2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be member of Scheduled Caste. The Hon'ble Supreme Court also has confirmed this.

    He has full liberty to profess Christianity, but he cannot continue in IAS.
    The person affected due to his act is only Dalit Hindus.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி