மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை


தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டபொதுக்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி., மேல் நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகமுத்து வரவேற்றார்.

மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். திண்டிவனம் கல்வி மாவட்ட தலைவர் ஜீவேந்திரன், மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் சாம்பமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநில பிரசார செயலாளர் சுப்ரமணி சிறப்புரையாற்றினர். கோர்ட் உத்தரவுப்படி, எம்.பில்., முடித்தவர்களுக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2004ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பணி வரன்முறை செய்திட வேண்டும் மற்றும் 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி